ஆன்மிகம்

சபரிமலையில் மண்டல கால வழிபாட்டுக்கு நாளை நடை திறப்பு

என்.கணேஷ்ராஜ்

குமுளி: சபரிமலை​யில் மண்​டல கால வழிபாடு நவ. 17-ல் தொடங்கி டிச.27 வரை நடை​பெற உள்​ளது. இதற்​காக நாளை (திங்​கள்) மாலை நடை திறக்​கப்​பட உள்​ளது. இந்த 41 நாள் தொடர் வழிபாட்​டில் பல்​வேறு மாநிலங்​களில் இருந்து லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் வர உள்​ள​தால் பல்​வேறு ஏற்​பாடுகளும் இறுதிக் கட்​டத்தை எட்​டியுள்​ளன.

இதன்​படி இடுக்கி, பத்​தினம்​திட்டா மாவட்​டத்​தின் வழித்​தடங்​களில் உள்ள உணவகங்​களில் 6 மொழிகளில் விலைப்​பட்​டியல் குறித்த விவரங்​கள் காட்​சிப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. பக்​தர்​களுக்கு ரூ. 2 லட்​சத்​துக்​கான காப்​பீடு வசதி உள்​ள​தால் தரிசன முன்​ப​தி​வின்​போதே வாரிசுதா​ரர், அவர்​களது உறவுமுறை உள்​ளிட்ட விவரங்​களை பதிவு செய்ய வலியுறுத்​தப்​பட்​டுள்​ளது.

சபரிமலைக்​கான வனப்​பாதை மண்​டல, மகர விளக்கு வழிபாட்​டுக் காலங்​களில் மட்​டுமே திறக்​கப்​படுவ​தால் இவற்றை தூய்மை செய்​யும் பணி வெகு​வாக முடிந்​துள்​ளன. அழுதகடவு நுழைவுப் பாதையில் காலை 7 மணிக்கு அனுமதிக்​கப்​பட்டு முக்​குழி​யில் பிற்​பகல் 2.30 மணிக்​குள் செல்​ல​வும், பின்பு அங்​கிருந்து காலை 7 மணிக்கு கிளம்பி பம்​பைக்கு பிற்​பகல் 3 மணிக்​குள் செல்​ல​வும், சத்​திரம் வனப்​பாதையில் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை செல்​ல​வும் நேர ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. நிர்​ணயிக்​கப்​பட்ட நேரத்​தில் வனப்​பகுதியை கடந்து செல்ல வேண்​டும் என்று வனத்​துறை​யினர் தெரி​வித்​துள்​ளனர்.

சந்​நிதானம் அருகே உள்ள பெரிய நடைப்​பந்​தல் சீரமைக்​கப்​பட்டு தயார் நிலை​யில் உள்​ளது. பம்பை, சந்​நிதானத்​தில் 24 மணி நேர மருத்​துவ சேவைக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. வனப்​பாதையில் 22 மருத்​துவ மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. முக்​கிய இடங்​களில் சிபிஆர் முதலுதவி மையங்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. மண்​டல கால வழிபாடு தொடங்குவதையொட்டி சந்​நிதானம், பம்பை உள்ளிட்ட பகுதி​களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT