கோப்புப் படம்
கம்பம்: மூலவர் சிலை பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (மே 25) மாலை நடை திறக்கப்பட உள்ளது.
மூலவர் சிலை பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாட்டுக்காக மீண்டும் நாளை (மே 25) மாலை கோயில் கருவறை திறக்கப்பட உள்ளது. அன்று பக்தர்களுக்கு தவக்கோல விபூதி பிரசாதமாக வழங்கப்படும்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் எதுவுமின்றி நடை சாத்தப்படும். பின்னர் 26-ம் தேதி அதிகாலை நிர்மால்ய பூஜை, கணபதி ஹோமத்துடன் வழிபாடுகள் தொடங்கும். பின்பு நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பிறகு இரவில் நடை சாத்தப்படும்.
இதற்கான முன்பதிவுகள் கடந்த வாரமே தொடங்கியது. ஒருநாள் வழிபாடு என்பதால் கூட்டம் அதிகம் இருக்காது. நிதானமாக தரிசனம் செய்யலாம் என்பதால் பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.