சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க ஆர்வமுடன் காத்திருந்த ஐயப்ப பக்தர்கள்.

 
ஆன்மிகம்

சபரிமலையில் மாறுபட்ட காலநிலையிலும் ஐயப்பனை தரிசிக்க குவிந்து வரும் பக்தர்கள்

செய்திப்பிரிவு

குமுளி: சபரிமலை​யில் வெயில், மழை என மாறு​பட்ட காலநிலை நிலவி வந்​தா​லும் ஐயப்​பனை தரிசனம் செய்ய பக்​தர்​கள் குவிந்து வரு​கின்​றனர்.

சபரிமலை ஸ்ரீ தர்​ம​சாஸ்தா கோயி​லில் கன்​னி​மாத (புரட்​டாசி) வழி​பாடு​களுக்​காக, கடந்த 16-ம் தேதி மாலை​யில் நடை திறக்​கப்​பட்​டது. தந்​திரி கண்​டரரு பிரம் ​மதத்​தன்முன்​னிலை​யில், மேல்​ சாந்தி பிர​சாத் நம்​பூ​திரி பல்​வேறு பூஜைகளை மேற்​கொண்டு வரு​கிறார். நேற்று அதி​காலை கணபதி ஹோமம், சந்தன அபிஷேக ஊர்​வலம், படிபூஜை வழி​பாடு​கள் நடை​பெற்​றன.

மண்​டல, மகர​விளக்கு திரு​விழாவில் கூட்​டம் அதி​கம் இருப் ப​தால், பலரும் தற்​போது மாதாந்​திர வழி​பாடு​களில் பங்​கேற்​ப​தில் ஆர்​வம் காட்டி வரு​கின்​றனர். இதனால், கடந்த சில மாதங்​களாகவே மாதாந்​திர வழி​பாடு​களுக்​கும் பக்​தர்​களின் கூட்​டம் அதி​கரித்து வரு​கிறது.

இந்​நிலை​யில், பரு​வ​மழை காரண​மாக மலை​யேறு​வ​தில் சிரமம் இருந்​தது. மேலும், ரானி, பத்​தினம்​திட்​டா, நிலக்​கல் உள்​ளிட்ட மலைச் சாலைகளில் வாக​னங்​களை இயக்​கு​வ​தி​லும் இடர்​பாடு இருந்து வரு​கிறது. நேற்று காலை மழை குறைந்​த​தால், பக்​தர்​கள் பலரும் ஆர்​வ​முடன் வரிசை​யில் காத்​திருந்து ஐயப்​பனை தரிசனம் செய்​தனர்.

ஆனால், பிற்​பகலில் இடி, மின்​னலுடன் கூடிய கனமழை பெய்​யத் தொடங்​கியது. மாறு​பட்ட காலநிலை நில​விய​போதும், பக்​தர்​கள் பக்​தி​யுடன் ஐயப்​பனை தரிசனம் செய்து வரு​கின்​றனர். மாதாந்​திர வழி​பாடு​கள் முடிந்து நாளை இரவு கோயில் நடை சாத்​தப்​படு​கிறது.

SCROLL FOR NEXT