சபரிமலை | கோப்புப் படம்

 
ஆன்மிகம்

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

செய்திப்பிரிவு

குமுளி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மாதாந்​திர பூஜைக்​காக நேற்று மாலை நடை திறக்​கப்​பட்​டது. தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரு தலைமை வகித்​தார்.

மேல்​சாந்தி பிர​சாத் நம்​பூ​திரி நடை திறப்பு வழி​பாடு செய்து, மங்கல இசை முழங்ககோயில் நடையை திறந்து வைத்​தார். ஐயப்​பனின் தவக்​கோலம் மாற்​றப்​பட்​டு, விஹ்​ரகம் மீது பூசப்​பட்​டிருந்த விபூதி பிர​சாத​மாக வழங்​கப்​பட்​டது.

தொடர்ந்​து, ஆழிக்​குண்​டத்​தில் ஜோதி ஏற்​றப்​பட்​டது. அதையடுத்​து, தரிசனத்​துக்கு மட்​டுமே பக்​தர்​கள் அனு​ம​திக்கப்​பட்​டனர். இரவு 10 மணிக்கு நடை அடைக்​கப்​பட்​டு, இன்று காலை 5 மணி முதல் சிறப்பு வழி​பாடு​கள் தொடங்​கு​கின்​றன. தொடர்ந்​து, வரும் 19-ம் தேதி இரவு கோயில் நடை அடைக்​கப்​படும்.

          
SCROLL FOR NEXT