ராஜ அலங்கார உடைகளுடன் தையல் கலைஞர் எஸ்.முனுசாமி.

 
ஆன்மிகம்

தைப்பூசத் திருவிழாவையொட்டி சுவாமிக்கு அணிவிப்பதற்காக மலேசியா முருகனுக்கு பழநியில் தயாரான ராஜ அலங்கார உடை

ஆ.நல்லசிவன்

பழநி: பழநி கோயி​லில் தண்​டா​யுத​பாணி சுவாமி தின​மும் 6 கால பூஜை​யின்​போது 6 வகை​யான அலங்​காரங்​களில் பக்​தர்​களுக்கு அருள்​பாலிக்​கிறார். இதில், ராஜ அலங்​காரத்​தைக் காணவே பெரு​வாரி​யான பக்​தர்​கள் விரும்​பு​கின்​றனர்.

இந்​நிலை​யில், பழநி முரு​க​னுக்கு அணிவிக்​கப்​படும் ராஜ அலங்​கார உடையைப்போல், மலேசியா தலைநகர் கோலாலம்​பூரில் உள்ள முரு​கன் கோயி​லில் சுவாமி சிலைக்கு அணி​விப்​ப​தற்​காக 2 ராஜ அலங்​கார உடைகள் வடிவ​மைக்​கப்​பட்​டு, பழநி​யில் இருந்து விமானத்​தில் நேற்று அனுப்பி வைக்​கப்​பட்​டன. பிப். 1-ம் தேதி தைப்​பூசத்​தின்​போது இந்த ராஜ அலங்​கார உடைகள் முரு​க​னுக்கு அணிவிக்​கப்பட உள்​ளன.

          

இதுகுறித்து சுவாமி சிலைகளுக்கு ஆடைகளை வடிவ​மைத்து தரும் பழநியைச் சேர்ந்த தையல் கலைஞர் எஸ்​.​முனு​சாமி கூறிய​தாவது: ஐந்​தாவது தலை​முறை​யாக சுவாமி சிலைகளுக்கு ஆடைகளை (முத்​தங்​கி) வடிவ​மைத்​துக் கொடுக்​கிறேன்.

தமிழகம் மட்​டுமின்​றி, வெளி​நாடு​களில் உள்ள கோயில்​களில் உள்ள சுவாமி சிலைகளுக்​கும் ஆர்​டரின்பேரில் ஆடைகளை வடிவ​மைத்து கொடுக்​கிறேன்.

மலேசியாவின் கோலாலம்​பூரில் உள்ள முரு​கன் கோயி​லில் தைப்​பூசத்​தன்று முரு​க​னுக்கு அணி​விப்​ப​தற்​காக 2 ராஜ அலங்​கார உடைகளை வடிவ​மைத்​து, விமானத்​தில் அனுப்பி வைத்​துள்​ளேன். இதே​போல, மலேசியா முரு​கன் கோயி​லில் ஏற்​றப்​பட்​டுள்ள தைப்​பூசக் கொடி​யும் நான் தயாரித்து அனுப்​பியது​தான்.

ராஜ அலங்​கார உடையில் சட்​டை, கால் சட்டை மற்​றும் கிரீடம் போன்ற தலைப்​பாகை இடம் பெறும். பட்​டுத்​துணி, முத்​துக்​களால் ராஜ அலங்​கார உடை வடிவ​மைக்​கப்​படு​கிறது.

ஒரு ஆடையை வடிவ​மைக்க குறைந்​தது 10 நாட்​களாகும். ராஜ அலங்​கார உடை ஒன்று ரூ.6,500. சுவாமி ஆடைகள் மட்​டுமின்றி சுவாமி ஊர்​வலத்​தில் எடுத்​துச் செல்​லப்​படும் குடை, தோரணங்​கள், தேரோட்​டத்​தின்​போது தேரில் பயன்​படுத்​தப்​படும் துணி​கள், தொம்​பை, ஆறு​முக காவடி​யும் வடிவ​மைத்து கொடுக்​கிறேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT