சென்னை: தமிழகத்தில் ரம்ஜான் ஈகைத் திருநாள் வரும் சனிக்கிழமை (21.03.26) அன்று கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை காஜி தாவூத் கைஸர் வெளியிட்ட அறிக்கையில், “இன்று தமிழகத்தில் எங்கும் பிறை தென்படவில்லை. எனவே, ரமலான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் சனிக்கிழமை (21.03.2026) ஈகை திருநாள் தமிழகத்தில் கொண்டாடப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.