மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனித் திருவிழாவின் 12-ம் நாளான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் மீனாட்சி அம்மன் பிரியாவிடை சுந்தரேசுவரர் பங்கேற்றனர். (உள்படம்) திருக்கல்யாண அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் அருள்பாலித்தனர்.

 
ஆன்மிகம்

திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா: சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம்

இன்று தேரோட்டம் நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பங்​குனித் திரு​விழா​வின் 12-ம் நாளான நேற்று சுப்​பிரமணிய சுவாமிக்​கும் தெய்​வானைக்கும் திருக்​கல்​யாணம் கோலாகலமாக நடை​பெற்​றது. முக்கிய விழா​வான தேரோட்​டம் இன்று (ஏப். 5) காலை நடை​பெறுகிறது.

முரு​கப் பெரு​மானின் அறு​படை வீடு​களில் முதல் படை வீடான திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பங்​குனி திரு​விழா மார்ச் 23-ம் தேதிகொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. நேற்று முன்​தினம் சுப்​பிரமணிய சுவாமிக்கு பட்​டாபிஷேகம் நடை​பெற்​றது. முக்​கிய விழா​வாக 12-ம் நாளான நேற்று திருக்​கல்​யாணத்தை முன்னிட்டு அதி​காலை 5 மணி​யள​வில் உற்​சவர் சந்​நி​தியி​லிருந்து மணக்​கோலத்​தில் அபிஷேகம் தீபா​ராதனை முடிந்து கோயிலுக்​குள் மண்​டகப்​படி​யில் சுப்​பிரமணி சுவாமியும், தெய்​வானையும் எழுந்​தருளினர்.

          

அங்கு தீபா​ராதனை முடிந்து தங்க சிம்​மாசனத்​தில் காலை 7.40 மணிக்கு கோயில் சந்​திப்பு மண்​டபத்​துக்கு முன்​பு, திருக்​கல்​யாணத்​தில் பங்​கேற்க மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லிலிருந்து வெள்ளி சிம்​மாசனத்​தில் புறப்​பட்ட மீனாட்சி அம்​மன், பிரி​யா​விடை சுந்​தரேசுவரரை வரவேற்​றனர்.

பின்பு மீனாட்சி சுந்​தரேசுவரருடன் கோயிலுக்​குள் வந்து கோயில் ஒடுக்க மண்​டபத்​தில் கன்னி ஊஞ்​சலாடி திரு​வாட்சி மண்​டபத்​தி​லுள்ள ஆறு​கால் மண்​டபத்​தில் சுப்​பிரமணிய சுவாமி, தெய்​வானை எழுந்​தருளினர். பகல் 12 மணிக்கு வேதமந்​திரங்​கள் முழங்க திருக்​கல்​யாணம் 12.15 மணி​யள​வில் நடை​பெற்​றது.

திரு​மணக்​கோலத்​தில் சுப்​பிரமணிய சுவாமி, தெய்​வானை அம்​மன் பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தனர். தீப, தூப ஆராதனை​கள் நடை​பெற்​றன. இதில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்று தரிசனம் செய்​தனர்.

அப்​போது திரு​மண​மான பெண்​கள் புதிய தாலிக்​க​யிறு அணிந்து கொண்​டனர். இரவு மீனாட்சி சுந்​தரேசுவரர் பல்​லக்​கிலும், சுப்​பிரமணிய சுவாமி தங்க அம்​பாரி வாக​னத்​தி​லும் தெய்​வானை அம்​மன் ஆனந்​த​ராயர் புஷ்ப பல்​லக்​கிலும் எழுந்​தருளி கோயில் 16 கால் மண்​டபத்​தில் தீபா​ராதனை முடிந்து மீனாட்சி சுந்​தரேசுவரரை வழியனுப்​பும் விழா நடை​பெற்​றது.

அதனைத் தொடர்ந்து இன்று முக்​கிய விழா​வான தேரோட்​டம் காலை 6.15 மணி​யள​வில் தொடங்கவுள்ளது. கிரிவலப் பாதையில் சுற்றிவந்து நிலையை அடையும். ஏப்​.6-ம் தேதி தீர்த்த உற்​சவத்​துடன் திரு​விழா நிறைவு​பெறும். இதற்​கான ஏற்​பாடு​களை அறங்​காவலர் குழுத் தலை​வர் சத்​யபிரி​யா, துணை ஆணை​யர் ரா.​ஞான​சேகரன் ஆகியோர் தலை​மை​யில் அறங்​காவலர்​கள், கோயில் பணி​யாளர்​கள் செய்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT