ஆன்மிகம்

மார்ச் 3-ல் சந்திரகிரகணம்: பழநி முருகன் கோயிலில் காலை 10.30 வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி

ஆ.நல்லசிவன்

பழநி: மார்ச் 3-ம் தேதி சந்திரகிரகணத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் காலை 10.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

வரும் மார்ச் 3-ம் தேதி செவ்வாய்கிழமை மாலை 3.30 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திரகிரகணம் நிகழ உள்ளது. எனவே, அன்றைய தினம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடைபெறும். பூஜை முடிந்ததும் மலைக்கோயிலில் அனைத்து சந்நிதிகளும் நடை சாத்தப்படும்.

          

அதனால், படிப்பாதை, யானைப்பாதை, வின்ச் ரயில் மற்றும் ரோப்காரில் வரும் பக்தர்கள் அன்றைய தினம் மலைக்கோயிலுக்கு காலை 10.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். சந்திரகிரகணம் முடிந்ததும் இரவு 7 மணிக்கு ஸம்ப்ரோச்சனை பூஜையை தொடர்ந்து, சாயரட்சை பூஜை நடைபெறும். பின்னர், தங்கரத புறப்பாடு மற்றும் அர்த்தஜாம பூஜை உடன் சந்நிதி அடைக்கப்படும்.

மார்ச்.4-ம் தேதி புதன்கிழமை விஸ்வரூப தரிசனம் உட்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். வழக்கம் போல் பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT