திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளிய தாயார்.
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாத வருடாந்திர பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதில் 4-ம்நாளான நேற்று கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு ஹனுமன் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பிரம்மோற்சவ விழாவில் மாட வீதிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான இன்று காலை பல்லக்கு உற்சவமும், இரவு பிரசித்தி பெற்ற கஜ வாகன சேவையும் நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருச்சானூர் கோயில் கோபுர வாசல் முதற்கொண்டு, கொடி மரம், பலிபீடம், விமான கோபுரம், தெப்பக் குளம், மாட வீதிகள் என அனைத்து இடங்களும் மின்விளக்கு அலங்காரம் மற்றும் மலர் தோரணங்களால் ஜொலிக்கின்றன.