திருமலை: ஆகஸ்ட் மாத ஏழுமலையான் தரிசனத்துக்காக மே 18-ம் தேதி காலை 10 முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை, பக்தர்கள் குலுக்கல் முறையில் சுப்ரபாதம், தோமாலை சேவை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவை போன்ற ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
21-ம் தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். 23-ம் தேதி காலை 10 மணிக்கு இலவசமாக அங்கபிரதட்சண டோக்கன்களும், 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான டிக்கெட்டுகளும், இதே நாள் மதியம் 3 மணிக்கு மாற்றுத் திறனாளி பக்தர்கள், மூத்த குடிமக்களுக்கான டிக்கெட்டுகளையும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இம்மாதம் 25-ம் தேதி காலை 10 மணிக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.