சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரி, தாமோதரன் நம்பூதிரி

 
ஆன்மிகம்

மண்டல, மகர கால பூஜை வழிபாட்டுக்கு சபரிமலையில் புதிய மேல்சாந்திகள் குட​வோலை முறை​யில் தேர்வு

என்.கணேஷ்ராஜ்

குமுளி: சபரிமலை​யில் மண்​டல, மகர கால பூஜை வழிபாட்​டுக்​கான புதிய மேல்​சாந்​தி​கள் குட​வோலை முறை​யில் நேற்று தேர்வு செய்​யப்​பட்​டனர். இவர்​கள் இரு​வரும் கார்த்​திகை முதல் தேதி​யில் இருந்து வழிபாடுகளை மேற்​கொள்ள உள்​ளனர்.

கேரள மாநிலம் சபரிமலை​யில் உள்ள சுவாமி ஐயப்​பன் கோயி​லில் மண்​டல, மகர பூஜைக்​கால வழிபாடுகளை மேற்​கொள்​வதற்​காக ஒவ்​வொரு ஆண்​டும் தலைமை அர்ச்​சகர்​கள் எனப்​படும் புதிய மேல்​சாந்​தி​கள் தேர்வு செய்​யப்​படுவது வழக்​கம். இந்த ஆண்டு மண்​டல வழிபாட்​டுக் காலம் நவ.17-ல் தொடங்க உள்​ளது. இத​னால், புதிய மேல்​சாந்​தி​களை தேர்வு செய்​வதற்​கான பணிகள் சில வாரங்​களாகவே நடை​பெற்று வந்​தன.

முதல்​கட்​டத் தேர்வு முடிவடைந்த நிலை​யில், இறுதிக்​கட்ட தேர்வு சபரிமலை​யில் நேற்று நடை​பெற்​றது. முதல்​கட்ட தேர்​வில் தேர்​வானவர்​களின் பெயர்​கள் அடங்​கிய சீட்​டுகளை போட்டு குட​வோலை முறை​யில் தேர்வு நடந்​தது.

பந்​தள அரண்​மனையைச் சேர்ந்த சிறு​வன் தேவநந்​தன் அர்​ஜூன் (7) சபரிமலை மேல்​சாந்​தி​யையும், சிறுமி அனஸ்வர ரஞ்​சித் (9) மாளி​கைபுரம் மேல்​சாந்​தி​யையும் தேர்வு செய்​தனர். அதன்​படி, சபரிமலை புதிய மேல்​சாந்​தி​யாக அரீக்​கரை சுப்​பிரமணி​யன் சங்​கரன் நம்​பூதிரி தேர்வு செய்​யப்​பட்​டார். திரு​வனந்​த​புரம் புளிமூடு பகுதி​யைச் சேர்ந்த இவர், கடந்த 5 ஆண்​டுகளாக திரு​வனந்​த​புரத்​தில் புகழ்​பெற்ற பழவங்​காடி கணபதி கோயி​லின் மேல்​சாந்​தி​யாக பணி​யாற்றி உள்​ளார்.

இதேபோல், மாளி​கைபுரம் அம்​மன் கோயில் மேல்​சாந்​தி​யாக பூழிக்​கோடு எ.தாமோதரன் நம்​பூதிரி தேர்வு செய்​யப்​பட்​டார். இவர் கோழிக்​கோடு அருகே பய்​யோலி​யில் உள்ள புகழ்​பெற்ற கீழூர் மகா​விஷ்ணு கோயி​லின் மேல்​சாந்​தி​யாக பணி​யாற்​றிய​வர் ஆவார்.தேர்வு செய்​யப்​பட்ட இவர்​களுக்கு திரு​விதாங்​கூர் தேவசம்​போர்டு அதி​காரி​கள், அலு​வலர்​கள் மற்​றும் பக்​தர்​கள் வாழ்த்து தெரி​வித்​தனர்.

இரு​வரும் வரும் கார்த்​திகை முதல் தேதி​யில் இருந்து ஐயப்​பன் மற்​றும் மாளி​கைபுரத்​தம்​மனுக்கு பல்​வேறு வழிபாடுகளை நடத்த உள்​ளனர். இதற்​காக இரு​வரும் இரு​முடி கட்டி, நவ.16-ம் தேதி சபரிமலைக்கு வரு​வர். அவர்​களை 18-ம் படி வழியே அழைத்​துச் சென்று புனிதநீர் தெளித்து சிறப்பு வழிபாடுகள் மேற்​கொள்​ளப்​படும். மறுநாள் முதல் இவர்​கள் நேரடி​யாக வழிபாடுகளை மேற்​கொள்​வார்​கள்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT