ஆன்மிகம்

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவடைந்தது: டிசம்பர் 30-ல் மீண்டும் நடைதிறப்பு

என்.கணேஷ்ராஜ்

குமுளி: சபரிமலை​யில் 41 நாள் தொடர் வழி​பாட்​டுக்​குப் பிறகு நேற்று மண்டல பூஜை நடை​பெற்​றது. முன்னதாக, ஆரன்​முலா பார்த்​த​சா​ரதி கோயி​லில் இருந்து கொண்​டு​வரப்​பட்ட தங்க அங்​கியை தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரு, மேல்​சாந்தி ஆகியோர் ஐயப்​பனுக்கு நேற்று முன்தினம் அணி​வித்​தனர்.

உச்ச நிகழ்​வாக நேற்று நடைபெற்ற மண்டல பூஜையை யொட்​டி அதி​காலை 3 மணிக்கு நடை திறக்​கப்​பட்டு நிர்​மால்ய பூஜை, நெய் அபிஷேகம் உள்​ளிட்ட வழி​பாடு​கள் நடை​பெற்​றன. காலை 10.30 மணிக்கு ஐயப்​பனுக்கு தங்​கக் கவசம் அணிவிக்​கப்​பட்டு மகா தீபா​ராதனை நடை​பெற்​றது. தொடர்ந்​து, பக்​தர்​கள் சுவாமியை வழிபட்​டனர்.

மீண்டும் 30-ம் தேதி... இரவு 10.45 மணி வரை பக்​தர்​கள் தரிசனத்​துக்கு அனு​ம​திக்​கப்​பட்​டனர். பின்​னர் கோயில் நடை சாத்​தப்​பட்​டது. ஜன. 14-ம்

தேதி மகரபூஜை நடை​பெற உள்​ளது. இந்த வழி​பாட்​டுக்​காக வரும் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்​டும் கோயில் நடை திறக்​கப்பட உள்​ளது. வரு​வாய் அதி​கரிப்பு திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு தலை​வர் கே.ஜெயக்​கு​மார் கூறும்​போது, “இந்த மண்டல காலத்​தில் கோயிலுக்கு ரூ.332.77 கோடி வரு​மானம் கிடைத்துள்ளது. கடந்த சீசனை​விட இம்​முறை வரு​வாய் அதி​கம். மகர​விளக்​குக்கு நடை​திறக்​கும் போது 12 லட்​சம் டின் அரவணை இருப்பு வைக்​கப்​படும்.

ஜன. 20-க்​குப் பிறகு தபால் மூலம் அரவணை​யைப் பெற்​றுக்​கொள்ள ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. பக்​தர்​களுக்கு கூடு​தல் வசதி செய்​வது தொடர்​பாக வரும் 29-ம் தேதி திரு​வனந்​த​புரத்​தில் ஆலோ​சனைக் கூட்​டம் நடத்​தப்​படும். புல்​மேடு வனப்​பாதை​யில் உள்ள பிரச்​சினை​கள் தீர்க்​கப்​படும்” என்​றார்.

SCROLL FOR NEXT