கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணத்தில் கட்டப்பட்டு வரும்  சமயபுரம் மாரியம்மன் கோயில். (உள்படம்) ஸ்ரீரங்கபட்டணத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சமயபுரம் மாரியம்மன்.

 
ஆன்மிகம்

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஜூன் 25-ம் தேதி மகா கும்பாபிஷேகம்

கே.சுந்தரராமன்

சென்னை: கர்​நாடக மாநிலத்​தில் உள்ள ஸ்ரீரங்​கபட்​ட​ணம் சமயபுரம் மாரி​யம்​மன் கோயி​லில் ஜூன் 25-ம் தேதி மகா கும்​பாபிஷேகம் நடை​பெற உள்​ளது.

கர்​நாடக மாநிலம் மாண்​டியா மாவட்​டம் ஸ்ரீரங்​கபட்​ட​ணம் பாபு​ராயன​கொப்​புலு​வில் காவிரி நதிக்​கரை​யில் சமயபுரம் மகா மாரி​யம்​மன் கோயில் நிறு​வப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் உள்ள திருச்சி காவிரி நதிக்​கரை​யில் அமைந்​துள்ள சமயபுரம் மாரி​யம்​மன் கோயில் போலவே நிறு​வப்​பட்​டுள்ள இக்​கோயி​லில் ஜூன் 25-ம் தேதி மகா கும்​பாபிஷேகம் நடை​பெற உள்​ளது.

குரு​நாதர் ஸ்ரீ சுரேஷ்வர ஆச்​சார்யா தனது ஸ்தூல குரு கைலாச ஆசிரம ஸ்தாபகர் ஸ்ரீ திருச்சி மகா சுவாமிகளின் வழி​காட்​டு​தலின்​படி ஸ்ரீரங்​கபட்​ட​ணத்​தில் காவிரி, லோக​பாவனி நதி​கள் சங்​கமத்​தில் திருச்சி சமயபுரம் கோயில் போலவே ஸ்ரீரங்​கபட்​ட​ணம் ஸ்ரீரங்​க​நாதர் கோயில், காசி விஸ்​வ​நாதர் கோயிலுக்கு அரு​கில் இக்​கோ​யிலை அமைத்​துள்​ளார்.

இக்​கோ​யில் குறித்து நிர்​வாகி​களுள் ஒரு​வ​ரான ஸ்ரீ​காந்த் சண்​முகம் கூறும்​போது, “ஆகம விதி​களின்​படி, திரா​விட கட்​டிடக்​கலை நுட்​பத்​தில் கருங்​கற்​களைப் பயன்​படுத்தி கோயிலை அமைக்க வேண்​டும் என்ற உறு​தி​யுடன் கடந்த 15 ஆண்​டு​களாக 3.5 ஏக்​கர் நிலப்​பரப்​பில், 75,000 சதுர அடி பரப்​பள​வில் இக்​கோ​யில் கட்​டப்​பட்டு வந்​தது. 2 பிர​காரங்​கள், 50 தூண்​கள், 5 பிரம்​மாண்ட கோபுரங்​கள், 9 நிலை ராஜகோபுரம் ஆகியன அமைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த ராஜ கோபுரம் இப்​பகு​தி​யிலேயே மிக​வும் உயர​மான ராஜகோபுரம் ஆகும்.

மூல​வர் எழுந்​தருளி​யிருக்​கும் கரு​வறை (உள் பிர​காரம்), மிக நேர்த்​தி​யாகச் செதுக்​கப்​பட்ட நுணுக்​க​மான வேலைப்​பாடு​களு​டன் கூடிய கருங்​கற்​களால் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. கரு​வறை​யில் உள்ள அம்​மனைச் சுற்​றி, அஷ்ட மாரி​யம்​மன்​கள், அஷ்ட மகா துர்​கைகள், அஷ்ட துர்​கைகள், அஷ்ட லட்​சுமிகளின் சிற்​பங்​கள் செதுக்​கப்​பட்ட 38 பிரம்​மாண்​ட​மான கருங்​கல் தூண்​கள் அமைந்​துள்​ளன. கோயி​லின் நுழை​வாயி​லில் 2 பெரிய யாளிச் சிற்​பங்​களும், விநாயகர் மற்​றும் சுப்​பிரமணி​யரின் நேர்த்​தி​யான சிலைகளும் அமைந்​துள்​ளன. அதேவேளை​யில், 52 அடி உயர​முள்ளராஜகோபுரத்​தின் இரு​புற​மும் காளி, மகிஷாசுரமர்த்​தினி ஆகியோரின் சிலைகள் காவல் தெய்​வங்​களாகத் திகழ்​கின்​றன.

மூன்​றாவது பிர​காரம் அமைக்​கும் பணி இரண்​டாம் கட்​டத் திட்​டத்​தில் சேர்க்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டத்​தில் ஆன்​மிகச் செயல்​பாடு​களுக்​கான ‘தேவி மண்​டபம்’, அன்​ன​தானத்​துக்​கான ‘அன்​னபூரணி மண்​டபம்’, ஆன்​மிக குரு​வின் வழி​காட்​டு​தலில் கல்வி பயில ‘குரு​குலம்’, கோமாதா காமதேனுவை வழிபடு​வதற்​கான ‘கோ​சாலை’, சுவாமிஜி தங்​கு​வதற்​கான ‘குடில்’, வருகை தரும் சாதுக்​கள், சேவகர்​கள் தங்​கு​வதற்​கான இருப்​பிடங்​கள் மற்​றும் பல்​வேறு கலாச்​சார நிகழ்​வு​களுக்​கான ‘பவன்’ ஆகியவை அடங்​கும்.

இக்​கோயி​லில் குட​முழுக்கு வைபவம், ஸ்ரீ திருச்சி ஞானதேசிக மகா சுவாமிகளின் ஆசி​யுடன், ஸ்ரீ ஜெயேந்​திரபுரி மகா ஸ்​வாமி தலை​மை​யில், ஸ்ரீ சதாசிவபுரி பகவத்​பா​தாச்​சார்ய சுவாமி ஸ்ரீ சுரேஷ்வர ஆச்​சார்​யா​வின் சங்​கல்​பத்​தின்​படி ஜூன் 25-ம் தேதி நடை​பெற உள்​ளது. அன்று மாலை அம்​மனின் புஷ்ப பல்​லக்கு புறப்​பாடு நடை​பெறுகிறது. இவ்​வாறு அவர் கூறி​னார். கூடு​தல் விவரங்​களை https://srisamayapuramashrama.com என்ற இணை​யதளம் மூலம் அறிந்து கொள்​ளலாம்.

SCROLL FOR NEXT