கோப்புப்படம்

 
ஆன்மிகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.19-ம் தேதி தொடக்கம்

செய்திப்பிரிவு

மதுரை: உல​கப் புகழ்​பெற்ற மீனாட்சி அம்​மன் கோயில் சித்​திரைத் திரு​விழா ஏப்​ரல் 19-ம் தேதி தொடங்கி ஏப்​ரல் 30-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதை முன்​னிட்​டு, சி்த்​திரை வீதி​களில் பந்​தல் அமைக்​கும் பணி மும்​முர​மாக நடை​பெற்று வரு​கிறது.

சித்​திரைத் திரு​விழா​வின் முதல் நாளான ஏப்​ரல் 19-ம் தேதி காலை 10.30 மணி​யள​வில் கொடியேற்​றம் நடை​பெறுகிறது. தின​மும் காலை, மாலை​யில் சுவாமி-அம்​மன் புறப்​பாடு நடை​பெறுகிறது.

          

முக்​கிய விழா​வான மீனாட்சி அம்​மனுக்கு பட்​டாபிஷேகம் ஏப்​.26-ம் தேதி இரவு 7.05 மணி​யள​வில் நடை​பெறவுள்ளது. ஏப்​.27-ல் திக்​கு​விஜ​யம் நடை​பெறுகிறது. முக்​கிய விழா​வான மீனாட்சி சுந்​தரேசுவரர் திருக்​கல்​யாணம் ஏப்​.28-ம் தேதி காலை 8.35 மணி​யள​வில் நடை​பெறுகிறது.

29-ம் தேதி காலை 6 மணி​யள​வில் தேரோட்​டம் நடை​பெறுகிறது. ஏப்.30-ம் தேதி தீர்த்​த​வாரி​யுடன் திரு​விழா நிறைவு​பெறுகிறது. இத்​திரு​விழாவை முன்​னிட்​டு, மீனாட்சி அம்​மன் கோயிலைச்சுற்றி பக்​தர்​கள் நின்று தரிசிக்​கும் வகை​யில், சித்​திரை வீதி​களில் பந்​தல் அமைக்​கும் பணி நேற்று முன்​தினம் தொடங்கி மும்​முர​மாக நடைபெற்று வரு​கிறது.

விழா ஏற்​பாடு​களை, அறங்​காவலர் குழு தலை​வர் ருக்​மணி பழனிவேல்​ராஜன், கோயில் இணை ஆணை​யர் நா.சுரேஷ் தலை​மை​யில் அறங்​காவலர்​கள், கோயில் பணி​யாளர்​கள் செய்து வரு​கின்​றனர்.

இதேபோல், அழகர்​கோ​வில் கள்​ளழகர் கோயி​லில் சித்​திரைத் திரு​விழா ஏப்​.29-ம் தேதி தொடங்​கு​கிறது. ஏப்​.30-ல் மதுரை மூன்​று​மாவடி​யில் கள்​ளழகரை வரவேற்கும் எதிர்​சேவை நடை​பெறும்.

தொடர்ந்​து, மே 1-ம் தேதி சித்ரா பவுர்​ணமி தினத்​தில் கள்​ளழகர் வைகை ஆற்​றில் தங்கக் குதிரை வாக​னத்​தில் எழுந்​தருள்​கிறார். இதில் லட்​சக்​கணக்கான பக்​தர்​கள் வைகை ஆற்றில் திரண்டு கள்​ளழகரை தரிசனம் செய்​வார்​கள். விழா ஏற்​பாடு​களை, கோயில் இணை ஆணை​யர் ஆர்​.ஹரிஹரன் தலை​மை​யில் கோயில் பணி​யாளர்​கள் செய்து வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT