சிக்கல் கோயிலில் அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் இருந்து சிங்காரவேலவர் வேல் வாங்கிய காட்சி. அடுத்தபடம். அப்போது சிங்காரவேலவர் முகத்தில் வியர்வை துளிகள் அரும்பின.

 
ஆன்மிகம்

சூரனை இன்று வதம் செய்கிறார் முருகப் பெருமான்: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சிக்கலில் அன்னையிடம் சக்தி வேல் வாங்கினார்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி/நாகப்பட்டினம்: திருச்​செந்​தூரில் சூரசம்​ஹார விழாவைக் காண லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்து வரு​கின்​றனர். இத​னால் நகரமே விழாக்​கோலம் பூண்​டுள்​ளது.

சூரனை வதம் செய்​வதற்​காக சிக்​கலில் அ்ன்னை வேல்​நெடுங்​கண்​ணி​யிடம் இருந்து முருகப் பெரு​மான் சக்​திவேலை பெறும் நிகழ்வு நேற்று நடந்​தது,தமிழ்க்​கட​வுள் முருகப்​பெரு​மானின் அறு​படை வீடுகளில் இரண்​டாவது படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கந்​தசஷ்டி திரு​விழா, கடந்த 10-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்​கியது.

அன்​றுமுதல் கோயில் வளாகத்​தில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் சஷ்டி விரதம் மேற்​கொண்​டுள்​ளனர். விழாவையொட்டி, கோயில் முழு​வதும் வண்ண விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ளது. நகரமே விழாக்​கோலம் பூண்​டுள்​ளது.

விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான சூரசம்​ஹாரம் இன்று (15-ம் தேதி) கோயில் கடற்​கரையில் நடக்​கிறது. இன்று அதி​காலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்​கப்​பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதி​காலை 2 மணிக்கு உதய​மார்த்​தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்​கிறது. காலை 6 மணிக்கு யாகசாலை​யில் சுவாமி ஜெயந்​திநாதர், வள்ளி, தெய்​வானையுடன் எழுந்​தருளியதும் யாகவேள்வி நடக்​கிறது.

மாலை 4 மணி அளவில் சுவாமி ஜெயந்​திநாதர் சூரசம்​ஹாரத்​துக்​காக கடற்​கரைக்கு எழுந்​தருள்​கிறார். அங்கு லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் முன்​னிலை​யில் சூரசம்​ஹாரம் நடக்​கிறது. யானை, சிங்​கம், சுயரூபம் ஆகிய ரூபங்​களில் வரும் சூரபத்​மனை வதம் செய்து, சேவலும், மயிலுமாக ஆட்​கொள்​கிறார். சூரசம்​ஹாரத்​தைக் காண தமிழகம் மட்​டுமின்றி, வெளிமாநிலங்​கள், வெளி​நாடுகளில் இருந்​தும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் நேற்று காலை முதலே திருச்​செந்​தூரில் குவிந்து வரு​கின்​றனர்.

காவடிகள் எடுத்​தும், கட​வுளர்​கள் போல் வேடமணிந்​தும் ஏராளமானோர் பாதயாத்​திரையாக வந்​தனர். சூரசம்​ஹார விழாவைக் காண 5 முதல் 6 லட்​சம் வரை பக்​தர்​கள் வரு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. நெல்லை சரக டிஐஜி திருநாவுக்​கரசு தலை​மையில் 4,100 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். தனிநபர் வாக​னங்​களுக்​கான சிறப்பு அனுமதி அட்டை வழங்​கப்​பட மாட்​டாது. திருச்​செந்​தூர் நகருக்​குள் பக்​தர்​கள் வசதிக்​காக கட்​ட​ணமில்லா 4 மினி பேருந்​துகள் சேவை தொடங்​கப்​பட்​டுள்​ளது.

அன்​னை​யில் வாங்​கிய வேல்: நாகை மாவட்​டம் சிக்​கலில் சிங்​காரவேல​வர் கோயில் உள்​ளது. முருகப் பெரு​மான், இக்​கோயி​லில்​தான் அன்னை வேல்​நெடுங்​கண்​ணி​யிடம் இருந்து சக்​திவேலை பெற்​றுச் சென்று திருச்​செந்​தூரில் சூரனை சம்​ஹாரம் செய்​த​தாக கந்​த​புராண வரலாறு கூறுகிறது. சிக்​கல் சிங்​காரவேலர் கோயி​லில் கந்​தசஷ்டி விழா நவ.10-ம் தேதி தொடங்​கியது. நேற்று காலை தேரோட்​டம் நடை​பெற்​றது.

அதைத் தொடர்ந்து, மாலை​யில் முக்​கிய நிகழ்ச்​சி​யாக தனது தாயார் வேல்​நெடுங்​கண்​ணி​யிடம் முருகப் பெரு​மான் சக்​திவேல் வாங்​கும் உற்​சவம் நடை​பெற்​றது. அப்​போது, பக்​தர்​கள் பக்​திப் பரவசத்​துடன் முருகப் பெரு​மான் மீது பூக்​களை தூவி அரோகரா என முழக்​கமிட்​டனர். வேல் வாங்​கும் நிகழ்​வின்​போது, சிங்​காரவேல​வரின் மேனி முழு​வதும் முத்து முத்​தாக வியர்​வைத் துளி​கள் அரும்​பின. இந்த அதிசய நிகழ்வை ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பரவசத்​துடன் தரிசனம் செய்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT