ஆன்மிகம்

திருப்​பதி கோயிலில் 2.45 லட்சம் பக்தர்கள் தரிசனம்: ரூ.12 கோடி உண்டியல் காணிக்கை

என்.மகேஷ்குமார்

திருமலை: கோடை விடு​முறை என்​ப​தால் திருப்​பதி ஏழுமலையான் கோயி​லில் வழக்​கத்​திற்​கும் அதி​க​மாக பக்தர்களின் கூட்​டம் உள்​ளது. அது​வும் கடந்த வெள்ளி (தொழிலாளர் தினம்), சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்​களும் அரசு விடுமுறை நாட்​கள் என்​ப​தால், கூட்​டம் மேலும் அதி​கரித்​தது.

இதனால் கோயிலுக்கு வெளியே சுமார் 5 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் வரிசை​யில் தரிசனத்​துக்​காக காத்​திருந்​தனர். கோடை காலத்​தில் கூட்​டம் அதி​கரிக்​கும் என்​பதால் கடந்த மே 1-ம் தேதி முதல் 2 மாதங்​களுக்கு விஐபி பிரேக் தரிசன முறையை தேவஸ்தான நிர்வாகத்தினர் முற்​றி​லு​மாக ரத்து செய்​தனர். எஸ்எஸ்டி (டோக்​கன் உள்ள சர்வ தரிசனம்) 3 மணி நேரத்துக்குள்ளும், ரூ.300 சிறப்பு தரிசனம் இரண்​டரை மணி நேரத்​துக்​குள்​ளும் சுவாமியை தரிசித்து விடு​கின்​றனர்.

சாதாரண நாட்​களில் தின​மும் 65 முதல் 70 ஆயிரம் பக்​தர்​கள் சுவாமியை தரிசனம் செய்​வர். ஆனால், தற்​போது கடந்த 3 நாட்களில் மட்​டுமே 2.45 லட்​சம் பக்​தர்​கள் சுவாமியை தரிசித்து உள்​ளனர். இதனால் கடந்த 3 நாட்​களில் மட்​டுமே உண்​டியல் மூலம் ரூ.11.95 கோடி காணிக்கை செலுத்​தப்​பட்​டுள்​ளது.

கடந்த மே 2ம் தேதி அதிகபட்​ச​மாக 91,005 பக்​தர்​கள் சுவாமியை தரிசித்தனர். மே 3ம் தேதி மட்​டுமே உண்​டியலில் ரூ.5.06 கோடி காணிக்கை செலுத்​தப்​பட்​டுள்​ளது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT