கோவை: சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பில், கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள சாரதாம்பாள் கோயிலில் ‘கீதாம்ருதம்’ நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுகிழமை) நடக்கிறது.
இதுகுறித்து சமஸ்கிருத பாரதி(தென் தமிழ்நாடு) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கீதா ஜெயந்தி விழா தொடர்பாக சம்ஸ்கிருத பாரதி கோவை ‘கீதாம்ருதம்’ என்ற விழா நாளை டிசம்பர் 21(ஞாயிறு) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவை பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள சாரதாம்பாள் கோயில் மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பகவத் கீதையின் அனைத்து 18 அத்தியாயங்களும் கூட்டு பாராயணம் செய்யப்படும். இதில் சமஸ்கிருத பாரதியின் காரியகர்த்தாக்கள், பத்ராசார வகுப்பு மாணவர்கள், மற்ற பள்ளி மாணவர்கள் உள்பட பொதுமக்களும் கலந்து கொள்கின்றனர்.
மேலும் அஞ்சல் வழி சமஸ்கிருதம் பயிலுதல் வகுப்புகள் மற்றும் இலவச பேச்சு பயிற்சி வகுப்புகளுக்கு புதிய மாணவர்கள் சேர்க்கை, சமஸ்கிருத புத்தகங்களின் விற்பனை நடைபெறும். அனைவரும் விழாவில் கலந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுக்கு பாத்திரம் ஆக கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 94437 22006, 94892 81557, 94873 41306 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.