காஞ்சிபுரம் ஹஜ்ரத் சையத் ஹாஜ் ஹமீது அவுலியா பாதுஷா தர்காவில் நடைபெற்ற சந்தனக் கூடு திருவிழா.

 
ஆன்மிகம்

காஞ்சிபுரம் ஹஜ்ரத் தர்கா சந்தனக்கூடு உற்சவம்: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

காஞ்​சிபுரம்: காஞ்சிபுரம் ஹஜ்ரத் சையத் ஹாஜ் ஹமீது அவுலியா பாதுஷா தர்​கா​வில் ஆண்​டு​தோறும் நடை​பெறும் சந்​தனக்​கூடு உருஷ் உற்சவ விழா மிக​வும் விமரிசை​யாக நடை​பெற்​றது.

இந்த விழா கடந்த 25-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. இதனைத் தொடர்ந்​து, தர்​கா​வில் திருக்​குர்​ஆன் ஓதுதல் உள்​ளிட்ட பல்​வேறு ஆன்​மிக நிகழ்​வு​கள் தினசரி நடை​பெற்று வந்​தன. விழா​வின் முக்​கிய நிகழ்​வான சந்​தனக்​கூடு உற்​சவம் நேற்று சிறப்​பாகக் கொண்​டாடப்​பட்​டது.

சுமார் 640 ஆண்​டு​களுக்கு முன்பு சமா​தி​யடைந்​து, இன்​று​வரை அனைத்து மக்​களுக்​கும் அருளாசி வழங்கி வரும் ஞானி​யின் சமா​திக்​கு, சிறப்பு வண்ண வாசனை மலர்​கள் மற்​றும் சந்​தனம் பூசிப் பிரம்​மாண்ட அலங்​காரம் செய்​யப்​பட்​டது.

இந்த விழா​வில் காஞ்​சிபுரம் மற்​றும் சுற்​றி​யுள்ள பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்த ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு தர்​கா​வில் தரிசனம் செய்து வழி​பாடு நடத்​தினர். விழாவுக்​கான ஏற்​பாடு​களைத் தர்​கா​வின் தர்​மகத்தா எம்​.​முகம்​மது இம்​தி​யாஸ், நிர்​வாகி​கள்​ பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT