வடலூர் சத்திய ஞான சபையில் நேற்று 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். | படங்கள்: எம்.சாம்ராஜ் |

 
ஆன்மிகம்

வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்: ஏராளமான வள்ளலார் பக்தர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

கடலூர்: வடலூர் சத்​திய ஞான சபை​யில் தைப்​பூச ஜோதி தரிசனம் நேற்று நடை​பெற்​றது. இதில் ஏராள​மான பக்​தர்​கள் பங்​கேற்று தரிசனம் செய்​தனர். கடலூர் மாவட்​டம் வடலூரில் உள்ள சத்​திய ஞான சபை​யில் 155-வது ஜோதி தரிசன விழாவையொட்டி நேற்று முன்​தினம் சன்​மார்க்க கொடி ஏற்​றப்​பட்​டது. தொடர்ந்​து, நேற்று சத்​திய ஞான சபை​யில் காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடை​பெற்​றது.

தொடர்ந்​து, காலை 10 மணி, நண்​பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, இன்று (பிப். 2) காலை 5.30 மணிக்கு 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்​பிக்​கப்​பட்​டது.

          

ஏராள​மான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு “அருட்​பெருஞ்​ஜோ​தி, அருட்​பெருஞ்​ஜோ​தி, தனிப்​பெருங்​கருணை, அருட்​பெருஞ்​ஜோ​தி” என்ற முழக்​கத்​துடன் ஜோதி தரிசனம் செய்​தனர்.

நாளை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்​டுக்​குப்​பத்​தில் சித்​திவளாகத் திருஅறை தரிசனம் நடை​பெறுகிறது. விழாவையொட்​டி, பக்​தர்​களுக்​குத் தேவை​யான அனைத்து வசதி​களை​யும் இந்து சமய அறநிலை​யத் துறை​யினர் செய்​துள்​ளனர். மேலும், வடலூருக்கு சிறப்பு ரயில்​கள், சிறப்பு பேருந்​துகள் இயங்​கப்​பட்​டன.

விழுப்​புரம் டிஐஜி அருள் அரசு, கடலூர் எஸ்​.பி. ஜெயக்​கு​மார் தலை​மை​யில் நெய்​வேலி டிஎஸ்பி ராஜேந்​திரன், வடலூர் காவல் ஆய்​வாளர் உதயகு​மார் மற்​றும் 2 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர்.

தைப்​பூச ஜோதி தரிசன விழாவையொட்டி வெளி மாவட்​டம், வெளி மாநிலம் மற்​றும் வெளி​நாடு​களில் இருந்து ஏராள​மான பக்​தர்​கள் வடலுரில் குவிந்​திருந்​தனர். தமிழக ஆளுநர் ஆர்​.என். ரவி, அமைச்​சர்​கள் எம்​ஆர்​கே.பன்​னீர்​செல்​வம், டிஆர்​பி.​ராஜா, மாவட்ட ஆட்​சி​யர் சிபி ஆதித்யா செந்​தில்​கு​மார் ஆகியோர் கலந்​து​கொண்டு ஜோதி தரிசனம் செய்​தனர்.

SCROLL FOR NEXT