ஆன்மிகம்

சுதந்திர தின விடுமுறை: பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

செய்திப்பிரிவு

பழநி: சுதந்​திர தின விடு​முறையையொட்​டி, பழநி முரு​கன் கோயி​லில் நேற்று பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி மலைக்​கோயி​லில் அதி​காலை முதலே வெளி​மாவட்​டம், வெளி​மாநிலங்​களில் இருந்​தும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​தனர். பக்​தர்​கள் கூட்​டம் அதிக அளவில் இருந்​த​தால், மலைக் கோயிலுக்​குச் செல்​லும் பக்​தர்​கள் குட​முழுக்கு நினை​வரங்​கம் வழி​யாக​வும், கீழே இறங்​கும் பக்​தர்​கள் படிப்​பாதை வழி​யாக​வும் அனு​ம​திக்​கப்​பட்​டனர். பொது மற்​றும் கட்டண தரிசன வரிசை​யில் 2 மணி நேரம் காத்​திருந்து சுவாமி தரிசனம் செய்​தனர்.

வரு​டாந்​திர பராமரிப்​புப் பணி காரண​மாக ரோப் கார் சேவை நிறுத்​தப்​பட்​டுள்​ளது. இதன் காரண​மாக, வழக்​கத்தை விட வின்ச் ரயி​லில் செல்ல கூட்​டம் அலைமோ​தி​யது. அன்​ன​தானக் கூடத்​தி​லும் பக்​தர்​கள் கூட்​டம் நிரம்பி வழிந்​தது. இரவில் தங்க ரதத்​தில் எழுந்​தருளிய சின்​னக்​ கு​மார சுவாமியை ஏராள​மானோர் தரிசனம் செய்​தனர்.

இதே​போல், திருஆ​வினன்​குடி கோயில், பெரிய​நாயகி​யம்​மன் கோயில், மாரி​யம்​மன் கோயி​லிலும் பக்​தர்​கள் கூட்​டம் அதிக அளவில் காணப்​பட்​டது. வெளியூர் பக்​தர்​கள் வந்த வாக​னங்​களால் பழநி​யில் முக்​கிய சாலைகளில் கடுமை​யான போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது.

SCROLL FOR NEXT