சபரிமலை சந்நிதானத்தில் இருந்து சரங்குத்தியில் எழுந்தருள்வதற்காக சென்ற ஐயப்பனின் பரிவார ஊர்வலம்.

 
ஆன்மிகம்

சபரிமலையில் குருதி பூஜையுடன் மகரஜோதி தொடர்பான அனைத்து வழிபாடும் நிறைவு

இன்று கோயில் நடை சாத்தப்படுகிறது

என்.கணேஷ்ராஜ்

குமுளி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் பக்​தர்​களுக்​கான தரிசனம் நேற்று இரவுடன் நிறைவடைந்​ததை தொடர்ந்து பக்​தர்​கள் அனை​வரும் வெளி​யேற்​றப்​பட்​டு, காளி மற்​றும் வனதேவதைகளுக்கு படையலிடும் பிரத்​யேக குருதி பூஜை நடை​பெற்​றது. இன்று கோயில் நடை சாத்​தப்​படுகிறது.

சபரிமலை ஐயப்​பன் கோயில் மகரஜோதி வழி​பாட்​டுக்​காக கடந்த 30-ம் தேதி நடை திறக்​கப்​பட்​டது. தொடர் வழி​பாடு​களுக்கு பிறகு, கடந்த 14-ம் தேதி ஐயப்​பனுக்கு பாரம்​பரிய நகைகள் அணிவிக்​கப்​பட்​டு, சிறப்பு வழி​பாடு நடை​பெற்​றது. பின்​னர், பொன்​னம்​பலமேட்​டில் தெரிந்த மகரஜோ​தியை தரிசனம் செய்​தனர்.

திரு​விழா​வின் உச்ச நிகழ்​வான மகரஜோதி தரிசனம் நிறை வடைந்​த​தால், அது தொடர்​பான சடங்​கு​கள் அடுத்​தடுத்து நடை​பெற்று வரு​கின்​றன. இதன் ஒரு பகு​தி​யாக, மணி மண்டப வழி​பாடு, படிபூஜை, ஐயப்பனை வேட்​டைக்கு அழைத்​துச் செல்​லுதல் உள்​ளிட்ட பல்​வேறு சம்​பிர​தாய வழி​பாடு​கள் நடந்​தன. இதன் தொடர்ச்​சி​யாக, ஐயப்​பன் சரங்​குத்​தி​யில் எழுந்​தருளல் நிகழ்ச்சி நடை​பெற்​றது.

இதுகுறித்து தேவசம் போர்டு அதி​காரி​கள் கூறும்போது, ‘ஐயப்​பனின் பரி​வார தெய்​வங்​கள் சரங்​குத்​தி​யில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​களை முறைப்​படுத்​தி, சந்​நி​திக்கு அனுப்​புவ​தாக ஐதீகம்.

தற்​போது விழா நிறைவடைந்​த​தால், அந்த பூதகணங்​களை சிறப்​பிக்​கும் வகை​யில் அவர்​களை மீண்​டும் சந்​நி​திக்கு ஐயப்​பன் அழைத்து வரு​வதற்​கான ஊர்​வலம்​தான் இது.

திரும்பி வரும்​போது இசைக்​கருவி​கள், பட்​டாசுகள் தவிர்க்​கப்​படும்’ என்​றனர். தரிசன நிறைவு நாளான நேற்று அதி​காலை 3 மணிக்கு நடை திறக்​கப்​பட்​டது. கணபதி ஹோமம், உச்​சபூஜை உள்​ளிட்​டவை நடை​பெற்​றன.

இரவு 9 மணி வரை பக்​தர்​கள் தரிசனத்​துக்கு அனு​ம​திக்​கப்​பட்​டனர். பின்​னர், சந்​நி​தானம், மாளி​கைப் புரத்​தம்​மன், மணிமண்​டபம் உள்​ளிட்ட பல பகு​தி​களி​லும் இருந்த பக்​தர்​கள் வெளி​யேற்​றப்​பட்​டனர்.

இதைத் தொடர்ந்​து, பந்​தள​ராஜ வம்​சத்​தினர், தந்​திரி, மேல்​ சாந்​தி​கள், வழி​பாட்டு ஊழியர்​கள் மட்​டுமே பங்​கேற்ற குரு​தி பூஜை நடை​பெற்​றது. இதில் விழாவை நிறைவு செய்​யும் வகை​யில், காளி மற்​றும் வன தேவதைகளுக்​கான சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. புனிதநீர் தெளிக்​கப்​பட்டு உணவு​கள் படையலிடப்​பட்​டன.

இன்று (ஜன.20) ராஜ பிர​தி​நி​தி​யின் பிரத்​யேக தரிசனத்​துக்​குப் பிறகு காலை 6.30 மணிக்கு கோயில் நடை சாத்​தப்​படுகிறது.சபரிமலை சந்நிதானத்தில் இருந்து சரங்குத்தியில் எழுந்தருள்வதற்காக சென்ற ஐயப்பனின் பரிவார ஊர்வலம்.

SCROLL FOR NEXT