ஆன்மிகம்

இரவீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

செய்திப்பிரிவு

சென்னை: ​வி​யாசர்​பாடி இரவீஸ்வரர் கோயில் தேரோட்​டம் கோலாகல​மாக நடை​பெற்​றது. இதில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

சென்னை வியாசர்​பாடி​யில் பழமை வாய்ந்த மரக​தாம்​பாள் உடனுறை இரவீஸ்​வரர் கோயில் அமைந்​துள்​ளது. இக்​கோயி​லில் இந்த ஆண்​டுக்​கான பிரம்​மோற்​சவப் பெரு​விழா கடந்த 13-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

தொடர்ந்​து, ரிஷப வாக​னம், சூரிய பிரபை, சந்​திர பிரபை, அதி​கார நந்தி சேவை, பூத வாக​னம், பவளக்​கால் விமானம், நாக வாகன உற்​சவங்​கள் நடை​பெற்​றன.

விழா​வின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் நேற்று நடை​பெற்​றது. காலை 8.15 மணிக்கு அலங்​கரிக்​கப்​பட்ட தேரில் உற்​சவர் எழுந்​தருளி​னார். 8.30 மணிக்கு இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் ரமேஷ், தேரை வடம் பிடித்து தேரோட்​டத்தை தொடங்கி வைத்​தார்.

மூர்த்​திங்​கர் தெரு, எருக்​கஞ்​சேரி நெடுஞ்​சாலை, முத்து முதலி தெரு, கரை​காத்த ராமர் திருக்​கோ​யில் தெரு ஆகிய வீதி​களில் தேர் அசைந்​தாடி வந்​தது. வழிநெடு​கிலும் திரண்​டிருந்த பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் ‘நமச்​சி​வாய’ கோஷத்​துடன் சுவாமி தரிசனம் செய்​தனர்.

வியாசர்​பாடி மார்க்​கெட் சந்​திப்​பில் மட்​டும் 4 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பக்​தர்​கள் திரண்​டனர். மதி​யம் 3 மணி அளவில் தேர் மீண்​டும் நிலையை வந்​த டைந்​தது.

இந்த தேரோட்ட விழா​வில், சென்னை மண்டல இணை ஆணை​யர் முல்​லை, கோயில் செயல் அலு​வலர் ஆட்சி சிவப்​பிர​காசம், மேலா​ளர் சு.தன​சேகர் உள்​ளிட்ட அதி​காரி​கள் கலந்து கொண்​டனர். ஜூன் 22-ம் தேதி இரவு திருக்​கல்​யாண உற்​சவ​மும், அதன்​பிறகு 23-ம் தேதி கொடி​யிறக்​கத்​துடன்​ பிரம்​மோற்​சவ விழா நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT