ஆடிப்பெருக்கு நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் பூஜைகள் செய்து வழிபட்ட பெண்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |

 
ஆன்மிகம்

தமிழகமெங்கும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் அணிந்து பெண்கள் வழிபாடு

செய்திப்பிரிவு

சென்னை: ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி புதிய மஞ்​சள் கயிற்​றில் திரு​மாங்​கல்​யம் அணிந்து பெண்​கள் வழி​பாடு நடத்​தினர்.

ஆடி மாதத்​தில் கொண்​டாடப்​படும் மிக முக்​கிய​மான விழாக்​களில் ஒன்று ஆடிப்​பெருக்​கு, ஆண்​டு​தோறும் ஆடி மாதம் 18-ம் தேதி ஆடிப்​பெருக்கு விழா கொண்​டாடப்​படும். இந்த நாளில் நீர்​நிலைகளில் நீர் பெருகி வரவேண்​டும்.

தண்​ணீர் பஞ்​சம், உணவுப் பஞ்​சம் ஏற்​ப​டா​மல் இருக்க வேண்​டும் என்​ப​தற்​காக ஆறு, குளம் உள்​ளிட்ட நீர்​நிலைகளில் பூஜை செய்து மக்​கள் வழிபடு​வார்​கள். இந்த நாளில் புதி​தாக தொழில் தொடங்​கி​னால் அது அதி​கள​வில் வளர்ச்சி அடை​யும் என்​பது மக்​களின் நம்​பிக்​கை. இதனால் மக்​கள் நிலம் உள்​ளிட்​ட​வற்றை இந்த நாளில் வாங்​கு​வதை​யும் வழக்​க​மாக வைத்​துள்​ளனர்.

காவிரி, வைகை, தாமிரபரணி

தமிழகத்​தில் திருச்சி காவிரிக் கரை​யில் இந்த விழா உற்​சாக கொண்​டாடப்​படும். திருச்​சியை தொடர்ந்து திருநெல்​வேலி, தூத்​துக்​குடி மாவட்​டங்​களில் தாமிரபரணி, மதுரை வைகை ஆற்​றங்​கரை​யிலும் ஆடிப்​பெருக்கு விழா கோலாகல​மாக நடக்​கும். அந்த வகை​யில் நேற்று தமிழகம் முழு​வதும் ஆடிப்​பெருக்கு உற்​சாக​மாகக் கொண்​டாடப்​பட்​டது.

இதையொட்டி ஆறு, குளம் போன்ற நீர்​நிலைகள் உள்ள பகு​தி​களில் மக்​கள் கூடி வழி​பாடு செய்​தனர். சென்​னையைப் பொருத்​தவரை மெரி​னா, பெசன்ட்​நகர் கடற்​கரை​யில் நேற்று திரு​மண​மான பெண்​கள், புத்​தாடை உடுத்தி பழைய தாலி கயிற்​றுக்கு பதிலாக புதிய மஞ்​சள் கயிற்​றில், திரு​மாங்​கல்​யம் அணிந்து வழி​பாடு செய்​தனர். மேலும் மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் குளம் உள்​ளிட்ட பல கோயில் குளங்​களி​லும் மக்​கள் வழிபட்​டனர்.

திரு​மணம் ஆகாதவர்​கள் விரை​வில் திரு​மணம் நடக்க வேண்​டும் என்​றும் சிறப்​புப் பிரார்த்​தனை செய்​து, சர்க்​கரைப் பொங்​கல் படையலிட்டு வழிபட்​டனர்.

ஆடிப்​பெருக்கை ஒட்டி மயி​லாப்​பூர் கோல​விழி​யம்​மன், முண்​டகக்​கன்​னி​யம்​மன், பாரி​முனை காளி​காம்​பாள், திரு​வொற்​றியூர் வடிவுடை​யம்​மன், மாங்​காடு காமாட்சி அம்​மன் உள்​ளிட்ட கோயில்​களில் சிறப்​புப் பூஜைகள் நடை​பெற்​றன.

மக்​கள் கோயில்​களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்​தனர். நீர்​நிலைகளில் வழி​பாடு நடத்த முடி​யாத சென்​னை வாசிகள் பலர் வீட்டில் பூஜை செய்து வழிபட்டனர்.

SCROLL FOR NEXT