மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை விழாவின் 10-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் மணக்கோலத்தில் அருள்பாலித்தனர். உடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளினர். | படம்: நா.தங்கரத்தினம் |

 
ஆன்மிகம்

மதுரையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: இன்று காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சுப.ஜனநாயக செல்வம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் சித்​திரைத் திரு​விழா​வின் 10-ம் நாளான நேற்று காலை​ மீனாட்​சி- சுந்​தரேசுவரர் திருக்​கல்​யாணம் கோலாகல​மாக நடை​பெற்​றது. பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​களின் தரிசனம் செய்தனர்.

அப்​போது பெண்​கள் புது மாங்​கல்ய கயிறு அணிந்து கொண்​டனர். திரு​விழா​வின் 11-ம் நாளான இன்று (ஏப்.29) தேரோட்​டம் நடை​பெறுகிறது. உலகப் புகழ்​பெற்ற மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லின் சித்​திரைத் திரு​விழா ஏப்​.19-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்கி ஏப்​.30-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

திரு​விழா நாட்​களில் காலை, மாலை வேளை​களில் சுவாமி, அம்​மன் பல்​வேறு வாக​னங்​களில் எழுந்​தருளினர். விழா​வின் 10-ம் நாளான நேற்று (ஏப்.28) முக்​கிய நிகழ்ச்​சி​யான மீனாட்​சி-சுந்​தரேசுவரர் திருக்​கல்​யாண வைபவம் நடந்தது.

இதை முன்​னிட்டு கோயி​லிலிருந்து அதி​காலை 4 மணி​யள​வில் வெள்ளி சிம்​மாசனத்​தில் புறப்​பட்ட மீனாட்சி அம்​மன், பிரி​யா​விடை சுந்​தரேசுவரர் நான்கு மாசி வீதி​களில் பல்​வேறு மண்​டகப்​படிகளில் எழுந்​தருளினர்.

திருக்​கல்​யாணத்​தில் பங்​கேற்க திருப்​பரங்​குன்​றம் முரு​கன் கோயி​லிலிருந்து புறப்​பட்ட சுப்​பிரமணிய சுவாமி- தெய்​வானை, பவளக்​க​னி​வாய் பெரு​மாள் நேற்று அதி​காலை​யில் கோயிலுக்கு வந்​தடைந்​தனர்.

திருக்​கல்​யாணத்தை முன்​னிட்டு கோயில் வளாகத்​தில் ஆடி வீதி​யில் திருக்​கல்​யாண மேடை 10 டன் மலர்​களால் அலங்​கரிக்​கப்​பட்​டிருந்​தது. திருக்​கல்​யாண மேடை​யில் முதலில் திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி, தெய்​வானை​யுடன் காலை 8.07 மணிக்கு எழுந்​தருளினர்.

பின்பு பிரி​யா​விடை​யுடன் சுந்​தரேசுவரர் காலை 8.09 மணிக்கு எழுந்​தருளினார். மீனாட்சி அம்​மன் 8.17 மணி​யள​வில் எழுந்​தருளினார். பவளக்​க​னி​வாய் பெரு​மாள் காலை 8.20 மணி​யள​வில் எழுந்​தருளி​னார்.

பின்​னர் காலை 8.30 மணி​யள​வில் மங்கல வாத்​தி​யங்​கள் முழங்க விநாயகர் பூஜை ஹோமத்​துடன் திருக்​கல்​யாணம் தொடங்​கியது. சிவாச்​சா​ரி​யார்​கள் வேதமந்​திரங்​கள் முழங்க பூஜைகள் செய்​தனர்.

பூஜைக்கு பின்பு காலை 8.43 மணிக்கு சுவாமி அம்​மனுக்கு காப்பு கட்​டப்​பட்​டது. காலை 8.45 மணி​யள​வில் பவளக்​க​னிவாய் பெரு​மாள் தாரை​வார்க்​கும் வைபவமும் 8.49-க்கு மாலைகள் மாற்​றும் வைபவமும் நடந்​தது.

கோயில் நிர்​வாகம் சார்​பில் சுவாமி, அம்​மனுக்கு பட்டு வஸ்​திரம் சாற்​றப்​பட்​டது. காலை 8.54 மணியளவில் சுந்​தரேசுவரர் மங்கல நாண் அணிவிக்க திருக்​கல்​யாணம் கோலாகலமாக நடை​பெற்​றது.

பின்பு தீப, தூப ஆராதனை​கள் நடை​பெற்​றன. அப்​போது பெண்​கள் புது திரு​மாங்​கல்ய கயிறு அணிந்து கொண்​டனர்.

இதில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்கேற்று மீனாட்சி அம்மனையும் சுந்தரேசு வரரையும் தரிசனம் செய்தனர். பின்​னர் சுவாமி​யும், அம்​மனும் பழைய திருக்​கல்​யாண மண்​டபத்​தில் எழுந்​தருளினர்.

அங்​கும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். இவ்​விழா​வில் அமைச்​சர்​கள் சேகர்​பாபு, பி.மூர்த்​தி, பழனிவேல் தியாக​ராஜன், ஆட்​சி​யர் பிரவீன்​கு​மார், மாநக​ராட்சி ஆணை​யர் சித்​ரா, எம்​எல்​ஏக்​கள் செல்​லூர்கே.​ராஜூ, ராஜன் செல்​லப்​பா,அறங்​காவலர் குழுத் தலை​வர் ருக்​மணி பழனிவேல்​ராஜன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

நேற்று இரவில் யானை வாக​னத்​தில் தங்க அம்​பாரி​யில் பிரி​யா​விடை சுந்​தரேசுவரர், ஆனந்​த​ராயர் பூப்​பல்​லக்​கில் மீனாட்சி அம்​மன் நான்கு மாசி வீதி​களில் வலம்வந்து அருள்பாலித்தார். மீனாட்​சியை திருக்​கல்​யாண கோலத்​தில் திரளான பக்​தர்​கள் தரிசித்​தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று (ஏப்​.29) காலை 6.30 மணி​யள​வில் நான்கு மாசி வீதி​களில் தேரோட்​டம் நடை​பெறுகிறது. 12-ம் நாள் (ஏப்.30) தீர்த்த பூஜை​யுடன் திரு​விழா நிறைவு​பெறுகிறது.

SCROLL FOR NEXT