ஆன்மிகம்

மே மாதத்தில் அலைமோதிய பக்தர்கள்: ஏழுமலையான் கோயிலில் 1.21 கோடி லட்டு விற்பனை

என்.மகேஷ்குமார்

திருமலை: கடந்த மே மாதம் கோடை விடு​முறை என்​ப​தால் திருப்பதி ஏழு​மலை​யான் கோயி​லில் கூட்​டம் அலை மோதி​யது.

தின​மும் சுமார் 90 ஆயிரம் பக்​தர்​கள் ஏழு​மலை​யானை தரிசித்தனர். இதனால் லட்டு பிர​சாதத்​தின் விற்​பனை​யும் அதிகமானது. கடந்த மே மாதத்​தில் மட்​டும் 1 கோடியே 21 லட்சத்து 35,528 லட்டு பிர​சாதம் விற்​பனை​யாகி சாதனை படைத்துள்​ளது. இதுவே கடந்த 2024 மே மாதத்​தில் 1.01 கோடி​யும், 2025 மே மாதத்​தில் 1.10 கோடி​யும் விற்​பனை​யானது.

பிரசித்தி பெற்ற லட்டு பிர​சாதம் தயாரிக்க ‘திட்​டம்’ எனும் அளவை கடந்த 1950-51 முதல் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் கடைபிடித்து வரு​கிறது. ஒரு லட்​டுக்கு 167 முதல் 170 கிராம் எடை கொண்ட மூலப்பொருட்​கள் அவசி​ய​மாகிறது. ஒரு லட்​டுக்கு 78 கிராம் சர்க்​கரை, 39 கிராம் கடலை மாவு, 36 கிராம் நெய், 7 கிராம் முந்​திரி, 3 கிராம் உலர் திராட்​சை, ஏலக்​காய் போன்​றவை பயன்​படுத்​தப்​படு​கிறது.

இது ​போன்று தின​மும் 68 டன் மூலப்​பொருட்​கள் லட்​டுக்​காக பயன்​படுத்​தப்​படு​கிறது. இதில் சர்க்​கரை 32 டன், நெய் 16 டன், முந்​திரி 3.5 டன், உலர் திராட்சை 2 டன், ஏலக்​காய் 400 கிலோ மற்றும் கற்​கண்டு 800 கிலோ பயன்​படுத்​தப்​படு​கிறது.

SCROLL FOR NEXT