ஆன்மிகம்

சபரிமலையில் ஐயப்ப சுவாமிக்கு 4 வகை நைவேத்தியங்கள்: தேவசம் போர்டு அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

குமுளி: சபரிமலை பிர​சாதங்​களில் பிரசித்தி பெற்​றது அரவணை பாயசம் ஆகும். இத்​துடன் ஐயப்​பனுக்கு மேலும் 3 வகை​யான நைவேத்​தி​யங்​கள் படைக்​கப்​படு​கின்​றன. அதி​காலை​யில் சுவாமிக்கு பஞ்​சாமிர்​தம் நைவேத்​தி​ய​மாக படைக்​கப்​படு​கிறது. முதற்​கால உஷத் பூஜை காலை 7.30 மணிக்கு நடை​பெறும்.

இதில் தேங்​காய் துரு​வலை பல முறை இடித்து அதில் இருந்து பெறப்​பட்ட பாலை சர்க்​கரை சேர்த்து தயாரிக்​கப்​படும் பாயசத்தை சுவாமிக்கு நைவேத்​தி​யம் செய்​யப்​படு​வது வழக்​கம்.

இது இடித்​துப்பிழிந்த பாயசம் எனப்​படும். மதியம் நடை​பெறும் உச்​சி​கால பூஜையின் போது சிவப்பு அரிசி, பொடித்த வெல்​லம், தேங்​காய், நெய்​யினால் தயாரிக்​கப்​பட்டஅரவணை​யும், இரவு நடை​பெறும் அர்த்த ஜாம பூஜை​யின்​போது சீரகம், வெல்​லம், சுக்​கு, மிளகு சேர்ந்த மருத்​துவ குணம் கொண்ட கசாய கலவை​யான பானகம் மற்​றும் எள் பாயச​மும் நைவேத்​தி​ய​மாக படைக்​கப்​படும். பாயசம் என்று சொன்​னாலும் இது எள் நிறைந்து திட​மாக அடை போன்று இருக்​கும்.

பக்​தர்​களுக்கு விற்பனை... ஐயப்​பனுக்கு நைவேத்​தி​யம் செய்​யப்​படும் பொருட்​களில் அரவணை பாயசம் மற்​றும் பஞ்​சாமிர்​தம் மட்​டுமே பக்​தர்​களுக்​குவிற்​பனை செய்​யப்​படு​கிறது என்றும், பஞ்​சாமிர்​தம் ரூ.125 -க்கு விற்கப்படுவதாகவும் தேவசம் போர்​டு அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT