ஆன்மிகம்

புரட்டாசி 3-வது சனிக்கிழமையில் கூட்டம்: திருமலையில் சுவாமியை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு

என். மகேஷ்குமார்

திருமலை: புரட்​டாசி மாதத்​தின் 3-வது சனிக்கிழமையையொட்டி, நேற்று திரு​மலை​யில் பக்​தர்​களின் கூட்​டம் அலை மோதி​யது. இதனால் சுவாமியை சர்வ தரிசனம் மூலம் தரிசனம் செய்ய 24 மணி நேரம் ஆனது.

திருப்​பதி ஏழு​மலை​யானை இந்த புரட்​டாசி மாதத்​தில் தரிசிக்க வேண்​டுமென​வும், நேர்த்​திக்​கடன் செலுத்த வேண்​டுமென​வும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் திரு​மலைக்கு வந்து செல்​கின்​றனர்.

இதனால் ஏழு​மலை​யானுக்கு உகந்த மாத​மான இந்த புரட்​டாசி​யில் பக்​தர்​கள் கூட்​டம் அளவுக்கு அதி​க​மாக காணப்​படு​வது வழக்​கம். அதி​லும், பிரம்​மோற்​சவம், புரட்​டாசி சனிக்​கிழமை​களில் எதிர்​பா​ராத வகை​யில் பக்​தர்​கள் கூட்​டம் மேலும் அதி​கரிக்​கும். நேற்று புரட்​டாசி 3-வது சனிக்​கிழமை​யையொட்​டி, எங்கு பார்த்​தா​லும் பக்​தர்​களின் கூட்​டம் காணப்​பட்​டது. நேற்று சர்வ தரிசனத்​தில் சுவாமியை தரிசிக்க 24 மணி நேரம் வரை பக்​தர்​கள் காத்திருந்​தனர்.

வைகுண்​டம் கியூ காம்ப்​ளக்​ஸில் தரிசனத்​துக்​காக காத்​திருக்​கும் பக்​தர்​களுக்​காக திருப்​பதி தேவஸ்​தானத்​தினர் ​வாரி சேவகர்​கள் மூலம் உணவு, சிற்​றுண்​டி, பால், குடிநீர், மோர் போன்​றவற்றை அடிக்​கடி விநி​யோகித்​தனர். லட்டு பிர​சாதம், தலை​முடி காணிக்​கை, காலண்​டர்​கள் விநி​யோக மையம், தங்​கும் அறை வழங்​குமிடம் என எங்கு பார்த்​தா​லும் பக்​தர்​களின் கூட்​டம் காணப்​பட்​டது

SCROLL FOR NEXT