கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சாணியடிக்கும் திருவிழாவில் பங்கேற்றவர்கள் ஒருவர் மீது ஒருவர் சாணி உருண்டைகளை வீசி மகிழ்ந்தனர்.

 
ஆன்மிகம்

கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயிலில் சாணியடி திருவிழா கோலாகலம்

போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்பு

செய்திப்பிரிவு

ஈரோடு: சத்​தி​யமங்​கலம் அருகே கும்​டாபுரம் பீரேஸ்வரர் கோயி​லில் நடை​பெற்ற சாணி​யடிக்​கும் திரு​விழா​வில் தமிழகம், கர்​நாடகத்​தைச் சேர்ந்த ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் மட்​டுமின்றி, போலந்து நாட்டு சுற்​றுலாப் பயணிகளும் பங்​கேற்​றனர்.

ஈரோடு மாவட்​டம் தமிழகம் - கர்​நாடக எல்லை​யில் உள்ள கும்​டாபுரம் கிராமத்​தில் 300 ஆண்​டுகள் பழமையான பீரேஸ்வரர் கோயில் அமைந்​துள்​ளது. இக்​கோயி​லில் ஆண்​டுதோறும் தீபாவளிப் பண்​டிகை முடிந்து 3-வது நாள் சாணி​யடிக்​கும் திரு​விழா நடை​பெறு​வது வழக்​கம்.

அதன்​படி, நேற்று முன்​தினம் மாலை கோயி​லில் சிறப்​புப் பூஜைகளு​டன் விழா தொடங்​கியது. முன்​னதாக, கிராமத்​தில் உள்ள பசுக்​களின் சாணம் சேகரிக்​கப்​பட்டு கோயி​லின் பின்​புறம் குவித்து வைக்​கப்​பட்​டது. தொடர்ந்து, விழாக் குழு​வினர் ஊர் எல்லை​யில் உள்ள குளத்​தில் சிறப்​புப் பூஜைகள் செய்​தனர்.

பின்​னர், மேள​தாளங்​கள் முழங்க பக்​தர்​களை விழா நடை​பெறும் இடத்​துக்கு அழைத்து வந்​தனர். இதையடுத்து, 200-க்​கும் மேற்​பட்ட சிறு​வர்​கள் முதல் பெரிய​வர்​கள் வரை வெற்​றுடம்​புடன் கோயி​லின் பின்​புறம் குவித்து வைக்​கப்​பட்​டிருந்த சாணத்தை உருண்​டைகளாகப் பிடித்து ஒரு​வர் மீது ஒரு​வர் வீசி விளை​யாடி மகிழ்ந்​தனர்.

இந்த சாணத்தை விவசாய நிலங்​களில் இட்​டால் விவசாயம் செழிக்​கும் என்​பது இப்​பகுதி மக்​களின் நம்​பிக்​கை​யாக உள்​ளது. மேலும், கிராம மக்​கள் நோயின்றி வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்​கவும், கால்​நடைகளை வனவிலங்​கு​களிடம் இருந்து பாது​காக்​கவும், கிராமம் வளம் பெறவும் இந்த விழா பாரம்​பரிய​மாக நடத்​தப்​படுவ​தாகக் கிராம மக்​கள் தெரி​வித்​தனர்.

பிரசித்தி பெற்ற பீரேஸ்வரர் கோயி​லில் நடை​பெற்ற சாணி​யடிக்​கும் திரு​விழா​வில் போலந்து நாட்​டைச் சேர்ந்த சுற்​றுலாப் பயணிகளும் பங்​கேற்​றனர். அவர்​கள் விழாவை புகைப்​படங்​கள் மற்​றும் வீடியோ எடுத்​ததுடன், தாங்​களும் சாணி உருண்​டைகளை ஒரு​வர் மீது ஒரு​வர் வீசி விளை​யாடி மகிழ்ந்​தனர். முதல்​முறை​யாக வெளி​நாட்​டுச் சுற்​றுலாப் பயணிகள் விழா​வில் பங்​கேற்​றது கிராம மக்​களிடையே உற்​சாகத்தை ஏற்​படுத்​தி​யது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT