சித்திரை முழுநிலவு திருவிழாவான நேற்று கண்ணகியை தரிசனம் செய்ய காத்திருந்த தமிழக - கேரள மாநில பக்தர்கள்.

 
ஆன்மிகம்

சித்திரை முழுநிலவு விழா கோலாகலம்: பச்சை பட்டில் காட்சியளித்த மங்கலதேவி கண்ணகி

தமிழக - கேரள பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்

என்.கணேஷ்ராஜ்

குமுளி: சித்​திரை முழுநிலவு திரு​விழாவையொட்​டி, மங்​கலதேவி கண்​ணகி பச்சை பட்டு உடுத்தி சிலம்பு ஏந்தி சர்வ அலங்​காரத்​தில் காட்சி அளித்​தார். வாழும் பெண் தெய்​வம் என்​பதை உணர்த்​தும் வகை​யில் மயில் பீலி வைத்து சிறப்பு வழி​பாடு நடத்​தப்​பட்​டது.

தேனி மாவட்​டத்​தின் தமிழக எல்​லை​யான விண்​ணேற்​றிப்​பாறை எனும் இடத்​தில் மங்​கல தேவி கண்​ணகி கோயில் அமைந்​துள்​ளது. மதுரையை எரித்​து​விட்டு வைகை ஆற்​றங்​கரை வழியே தலை​விரி கோல​மாக வந்த கண்​ணகிக்​கு, கோவலன் மங்​கல​நாண் பூட்டி இங்​கிருந்து விண்​ணுக்கு அழைத்​துச் சென்​ற​தாக ஒரு நம்​பிக்​கை.

இதனால், கணவனை இழந்​தா​லும் மங்​கலதேவி கண்​ணகி என்ற பெயரிலேயே இத்​திருத்​தலம் அழைக்​கப்​படு​கிறது. இக்​கோ​யிலுக்கு தமிழகத்​தின் கூடலூர் அருகே உள்ள பளியன்​குடி வழி​யாக 6.6 கி.மீ. தூரம் நடை​பாதை வழி​யாக​வும், கேரளா​வின் குமுளி, கொக்​கரகண்​டம் பகு​தி​யில் 14 கி.மீ. ஜீப் பாதை வழி​யாக​வும் செல்​லலாம்.

கோயில் அமைந்​துள்ள இடம் வனப்​பகுதி என்​ப​தால் சித்திரை மாத முழுநில​வன்று ஒரு நாள் மட்​டும் வழி​பாட்​டுக்​காக பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். அதன்​படி, கோலாகல​மாக நேற்று விழா நடை​பெற்​றது.

சிறப்பு அலங்காரத்தில் மங்கலதேவி கண்ணகி.

இங்கு கண்​ணகிக்கு சிதிலமடைந்த சிலையே இருப்​ப​தால் திரு​விழாவை முன்​னிட்டு நேற்று அதி​காலை அம்​மனுக்கு உருக்​கொடுக்​கும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. தொடர்ந்​து, தமிழகம் சார்​பில் பூசாரி ராஜலிங்​கம் அம்​மனுக்கு சர்வ அலங்​காரம் செய்து சிறப்பு வழி​பாடு​களை நடத்​தி​னார்.

இதைத் தொடர்ந்​து, கையில் சிலம்​பு, வளை​யல், மங்​கல​நாணுடன் கண்​ணகி காட்​சி​யளித்​தார். பச்​சைப் பட்​டுடன் அருள்​பாலித்த மங்​கலதே​வியை பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர்.

கடந்த ஆண்​டை​விட குறை​வான ஜீப்​களுக்கு அனு​மதி அளிக்​கப்​பட்​ட​தால் பக்​தர்​கள் கோயிலுக்கு செல்​வ​தில் சிரமம் ஏற்​பட்​டது. இதனால், பலரும் குமுளி வழி​யாக நடந்தே கோயிலுக்​குச் சென்று திரும்​பும் நிலை ஏற்​பட்​டது.

வரு​வாய்த் துறை சார்​பில் கோயில் முன்​பாக பொங்​கல் வைத்​த​போது, கேரள வனத்​துறை​யினர் எதிர்ப்​புத் தெரி​வித்​தனர். ஆண்​டு​தோறும் சுற்​றுலாத் துறை சார்​பில் பளியன்​குடி​யில் பரத நாட்​டி​யம், பட்​டிமன்​றம் உள்​ளிட்ட பல்​வேறு கலைநிகழ்ச்​சிகள் நடை​பெறும்.

ஆனால், இந்த ஆண்டு எது​வும் நடை​பெற​வில்​லை. இதனால் பக்​தர்​கள் ஏமாற்​றமடைந்​தனர். கேரள வனத்​துறை மழை அறி​விப்பை காரணம் காட்டி தரிசன நேரத்​துக்கு ஒரு மணி நேரத்​துக்கு முன்​ன​தாக பிற்​பகல் 1.30 மணியி​லிருந்து பக்​தர்​களை கீழே இறங்​கிச் செல்ல அறி​வுறுத்​தினர். மேலும், குமுளி​யில் இருந்​தும் ஜீப் இயக்​கத்தை முன்​ன​தாகவே நிறுத்​தி​ய​தால் பலரும் ஏமாற்​றத்​துடன் திரும்​பிச் சென்​றனர்.

SCROLL FOR NEXT