கோப்புப் படம்

 
ஆன்மிகம்

சிறுவர்கள் சிரமமின்றி தரிசனம் செய்கிறார்களா? - சபரிமலையில் குழந்தைகள் உரிமைகள் ஆணையம் ஆய்வு

செய்திப்பிரிவு

தேனி: சபரிமலை​யில் சிறு​வர், சிறுமிகள் சிரமமின்றி தரிசனம் செய்​கிறார்​களா என்​பது தொடர்​பாக, கேரள மாநில குழந்​தைகள் உரிமை​கள் ஆணை​யம் கோயி​லில் நேற்று ஆய்வு மேற்​கொண்​டது.

சபரிமலை​யில் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்​வதற்​காக ஏராள​மான குழந்​தைகளும், முதி​ய​வர்​களும் வந்​து​கொண்​டிருக்​கின்​றனர். இவர்​கள் 18-ம்​படி ஓரப் பகு​தி​யில் ஏறிச்​செல்ல அனு​ம​திக்கப்​பட்​டு, காவலர்​கள் மூலம் தூக்கி விடப்​படு​கின்​றனர். இந்​நிலை​யில், சபரிமலை​யில் குழந்​தைகள் நலனை உறுதிசெய்​யும் வகை​யில், கேரள மாநில குழந்​தைகள் உரிமை​கள் ஆணை​யம் நேற்று சபரிமலைக்கு வந்​தது. ஆணை​யத் தலை​வர் கே.​வி.மனோஜ்கு​மார், உறுப்​பினர்​கள் பி.மோகன்​கு​மார் கே.கே.ஷாஜு உள்​ளிட்​டோர் சந்​நி​தானத்​தில் ஆய்​வில் ஈடு​பட்​டனர்.

பின்​னர் அவர்​கள் சபரிமலை காவல் துறை தலைமை ஒருங்​கிணைப்​பாளர் ஏடிஜிபி ஸ்ரீஜித், தேவசம் போர்டு நிர்​வாக அதி​காரி எஸ்​.ஸ்ரீனி​வாஸ் உள்​ளிட்​டோரை சந்​தித்​து, குழந்​தைகள் தரிசனம் செய்​வதற்​காக செய்​யப்​பட்​டுள்ள வசதி​கள் குறித்து கேட்​டறிந்​தனர். அப்​போது, பல்​வேறு துறை​கள் சார்​பில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் நடவடிக்​கைகள் குறித்து தேவசம் போர்டு அதி​காரி​கள் விளக்​கம் அளித்​தனர். தொடர்ந்​து, பெரிய நடைப்​பந்​தல், 18-ம்​படி, சந்​நி​தானம் உள்​ளிட்ட பகு​தி​களில் ஆணை​யம் சார்​பில் ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது.

பின்​னர், பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்​காக அமைக்​கப்​பட்​டுள்ள சிறப்பு வரிசையை விரிவுபடுத்த வேண்​டும் என்​றும், அனைத்து குழந்​தைகளுக்​கும் மணிக்​கட்டு பட்​டைகளை அணிவதை உறுதி செய்​ய​வேண்​டும் என்​றும் ஆணை​யம் உத்​தர​விட்​டது.

SCROLL FOR NEXT