அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நேற்று அன்னாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற தீபாராதனை.

 
ஆன்மிகம்

ஐப்பசி மாத பவுர்ணமி: தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம் கோயில்களில் அன்னாபிஷேகம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

அரியலூர்: மூல​வர் லிங்​கத்​தின் மீது சாத்​தப்​படும் ஒவ்​வொரு சாதமும் லிங்​கத்​தின் தன்​மையைப் பெறு​வ​தாகவும், அத​னால், ஒரேநேரத்​தில் கோடிக்​கணக்​கான சிவலிங்​கத்தை தரி​சிக்​கும் புண்​ணி​யம் கிடைக்​கும் என்​ப​தும் ஐதீகம்.

அதன்​படி, ஐப்​பசி பவுர்​ணமி தினமான நேற்று தஞ்​சாவூர் பெரு​வுடை​யார், கங்​கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்​களில் நேற்று அன்​னாபிஷேகம் விமரிசையாக நடை​பெற்​றது. இதை ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர்.

தஞ்​சாவூர் பெரிய கோயி​லில், பக்​தர்​கள் அளித்த 1,000 கிலோ அரிசி, 500 கிலோ காய்​கறிகள், பழங்​கள் ஆகிய​வற்றை பயன்​படுத்தி பெரு​வுடை​யாருக்கு அன்​னாபிஷேகம் நடை​பெற்​றது.

அரிசி மூலம் வடிக்​கப்​பட்ட சாதத்தை கொண்டு 13 அடி உயர பெரு​வுடை​யாருக்கு அபிஷேகம் செய்​யப்​பட்​டது. மேலும், காய்​க​னிகள், பழங்​கள் ஆகிய​வற்​றால் பெரு​வுடை​யாருக்கு அலங்​காரம் செய்​யப்​பட்டு தீபாராதனை நடை​பெற்​றது.

இதில், பக்​தர்​கள் திரளானோர் பங்​கேற்று, நீண்​ட​வரிசையில் காத்​திருந்து வழிபட்​டனர். பின்​னர், இர​வில் அலங்​காரம் கலைக்​கப்​பட்டு, பக்​தர்​களுக்கு பிரசாதம் வழங்​கப்​பட்​டது.

இதேபோல, அரியலூர் மாவட்​டம் ஜெயங்​கொண்​டத்தை அடுத்த கங்​கை கொண்​டசோழபுரத்​தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயி​லில் அன்​னாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடை​பெற்​றது. இந்த கோயி​லில் மூல​வ​ராக 60 அடி சுற்​றளவும், 13.5 அடி உயர​மும் கொண்ட சிவலிங்​கம் உள்​ளது.

ஐப்​பசி பவுர்​ணமியையொட்டி, 100 மூட்டை(2,500 கிலோ) அரி​சி​யைக் கொண்டு சாதம் சமைத்து, மூல​வருக்கு அன்​னாபிஷேகம் நடை​பெற்​றது. பிறகு பல​காரங்​கள், பழங்​கள், பூக்​களைக் கொண்டு மூல​வர் அலங்​கரிக்​கப்​பட்டு, சிறப்பு தீபாராதனை காண்​பிக்​கப்​பட்​டது.

பின்​னர், மூல​வர் மீது சாத்​தப்​பட்ட சாதம் எடுக்​கப்​பட்டு, பக்​தர்​களுக்கு பிரசாத​மாக வழங்​கப்​பட்​டது. மீதி​யிருந்த சாதம் அரு​கில் உள்ள குளத்​தில் மீன்​களுக்கு உணவாக அளிக்​கப்​பட்​டது. விழா​வில், ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொண்​டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT