திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் 30-ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
இந்நிலையில், ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி கோயில் முழுவதும் நேற்று சுத்தம் செய்யப்பட்டது.
கோயில் கருவறை முதற்கொண்டு, கொடிக் கம்பம், பலி பீடம், உப சன்னதிகள், விமான கோபுரம் என அனைத்து இடங்களிலும் பன்னீர், பச்சை கற்பூரம், மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்றவற்றை கலந்து வாசனை திரவியத்தால் சுத்தம் செய்யப்பட்டது. இதனால் மதியத்துக்கு பின்னரே பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.