மதுரை: மலேசியாவிலுள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு தமிழக அரசின் நல்லிணக்க உறவை மேம்படுத்தும் வகையில் கள்ளழகர் கோயில் வஸ்திரம் மரியாதை செய்யப்படுகிறது. அதனையொட்டி இன்று அழகர்கோவிலில் இருந்து மாலை உள்ளிட்ட வஸ்திரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொண்டு செல்லப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் 2022-2023 மானிய கோரிக்கையின்போது, தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கும் இதர மாநிலங்கள் மற்றும் இதர நாடுகளில் உள்ள கோயிலுக்கும் இடையே நல்லிணக்க உறவை மேம்படுத்த வஸ்திர மரியாதை செய்யப்படும் என்று இந்து சமய அறிநிலையத் துறை அமைச்சர் அறிவித்தார்.
மலேசியா நாட்டில் கில்லான் சிலாங்கூர் பகுதியில் 127 ஆண்டுகள் பழமையான சுந்தர ராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு தமிழக அரசின் சார்பில் நல்லிணக்க உறவை மேம்படுத்தும் வகையில் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் இருந்து மாலை உள்ளிட்ட வஸ்திரம் மரியாதை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை அழகர்கோவிலில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் மாலை மற்றும் வஸ்திரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் மு.ராமசாமி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்தனர். இக்குழுவினர் சென்னை சென்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருடன் இக்குழுவினர் மே 19-ல் மலேசியா செல்கின்றனர்.
மலேசியாவிலுள்ள சுந்த ரராஜ பெருமாள் கோயிலுக்கு நல்லிணக்க உறவை மேம்படுத்தும் வகையில கள்ளழகர் கோயிலிலிருந்து மாலை உள்பட வஸ்திரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொண்டு செல்லப்பட்டது.