ஆன்மிகம்

ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருப்பு

செய்திப்பிரிவு

திருமலை: கோடை விடுமுறை என்பதால் திருமலையில் கடந்த ஒரு மாதமாகவே பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.

தரிசனத்திற்கு செல்லும் வரிசைகள், லட்டு பிரசாதம் வழங்கும் இடம், தலைமுடி காணிக்கை செலுத்துமிடம், அன்ன பிரசாத கூடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் நேற்று 24 மணி நேரம் வரை காத்திருந்தனர். இதனால் சிலைதோரணம் வரை பக்தர்கள் வரிசை நீண்டிருந்தது. ஏழுமலையானை திங்கட்கிழமை 70,366 பேர் தரிசனம் செய்தனர். உண்டி யல் காணிக்கையாக பக்தர்கள் ரூ.4.32 கோடி செலுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT