ஆன்மிகம்

வார ராசி பலன் 17-07-2014 முதல் 26-07-2014 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

சந்திரசேகர பாரதி

மேஷம்

மேஷ ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் சந்திரன் 12-ல் உலவுவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சந்திரனுடன் கேது இருப்பதால் மனக்குழப்பம் உண்டாகும். என்றாலும் குரு பார்ப்பதால் நலம் உண்டாகும். வார நடுப்பகுதியில் அலைச்சல் அதிகரிக்கும். பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. வாரப் பின்பகுதியில் பணவரவு அதிகரிக்கும்.

குடும்பத்தில் அமைதி காணலாம். நண்பர்கள், உறவினர்கள் உதவி புரிவார்கள். வியாபாரிகளும் இயந்திரப் பணியாளர்களும் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். பயணத்தால் அனுகூலம் உண்டு. புதிய பதவி, பட்டங்கள் சிலருக்குக் கிடைக்கும். 23-ம் தேதி முதல் புதன் 4-ம் இடத்திற்கு மாறுவதால் வியாபாரம் பெருகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 18, 23. | திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு. .

நிறங்கள்: வெண்மை, இளநீலம் | எண்கள்: 4, 6.

பரிகாரம்: கணபதியையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.

ரிஷபம்

ரிஷப ராசி வாசகர்களே!

உங்கள் ஜன்ம ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 6-ல் சனியும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் சந்திரன் 11-ல் உலவுவதால் மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். வார நடுப் பகுதியில் வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. உடல்நலம் சீராகும்.

நல்ல தகவல் வந்து சேரும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். கற்பனை வளம் பெருகும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும் நேரமிது. மாணவர்களது நிலை உயரும். 23-ஆம் தேதி முதல் புதன் 3-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 18, 23 | திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை | எண்கள்: 1, 5, 6. 7.

பரிகாரம்: துர்கை அம்மனையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.

மிதுனம்

மிதுன ராசி வாசகர்களே!

உங்கள் ஜன்ம ராசியில் ராசிநாதன் புதனும் சுக்கிரனும் 2-ல் குருவும் 10-ல் கேதுவும் உலவுவதால் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். செல்வாக்கும் மதிப்பும் உயரும். பணவரவு அதிகமாகும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு கூடும். வியாபாரிகளுக்குத் திறமைக்குரிய பயன் கிடைத்துவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.

நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. 23-ஆம் தேதி முதல் புதன் 2-ஆமிடம் மாறுவதால் வியாபாரம் பெருகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,ஜூலை 18, 23 (பகல்) | திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு, வடக்கு.

நிறங்கள்: இளநீலம், பச்சை, வெண்மை, மெரூன், பொன் நிறம், மஞ்சள்

எண்கள்: 3, 5, 6, 7 | பரிகாரம்: ராகு, சனி, செவ்வாய் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது.

கடகம்

கடக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களால் ஆதாயம் கிடைக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். 4-ல் செவ்வாயும் சனியும் உலவுவதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.

இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. தாய் நலனில் கவனம் தேவை. 9-ல் கேதுவும் ஜன்ம ராசியில் சூரியனும் குருவும் இருப்பதால் தந்தை நலனிலும் அக்கறை செலுத்த வேண்டிவரும். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 23-ஆம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு மாறுவதும் சிறப்பாகாது. நண்பர்கள், உறவினர்களால் மன அமைதி கெடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,ஜூலை 18, 23 | திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, சாம்பல் நிறம் | எண்கள்: 4, 6.

பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். ஏழை மாணவர்கள் கல்வி பயில உதவி செய்யவும். விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.

சிம்மம்

சிம்ம ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சனியும் 11-ல் புதனும் சுக்கிரனும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்குவார்கள். இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாதனங்கள், நிலபுலங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். மாணவர்களது திறமை வெளிப்படும். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால் வார முன்பகுதியில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும்.

ராசிநாதன் சூரியன் 12-ல் குருவுடன் கூடியிருப்பதால் கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அரசாங்கத்தாரால் பிரச்னைகள் உண்டாகும். தந்தை நலனில் கவனம் தேவை. மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். 23-ஆம் தேதி முதல் புதன் 12-ஆமிடம் மாறுவதால் செலவுகள் அதிகமாகும். சிக்கன நடவடிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,,ஜூலை 22, 23 | திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.

நிறங்கள்: பச்சை, நீலம், சிவப்பு | எண்கள்: 5, 6, 8, 9.

பரிகாரம்: துர்க்கையையும் விநாயகரையும் வழிபடவும். சூரிய நமஸ்காரம் செய்யவும். கண் பார்வையற்றவர்களுக்கு உதவி செய்வது நல்லது.

கன்னி

கன்னி ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 10-ல் புதனும் சுக்கிரனும் 11-ல் சூரியனும் குருவும் உலவுவதால் நல்ல வாய்ப்புகள் கூடிவரும். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். பொருளாதார நிலை உயரும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோரது பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் உருவாகும். வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். 23-ம் தேதி முதல் புதன் 11-ம் இடம் மாறுவதால் செல்வ வளம் பெருகும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்த வாய்ப்புக் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 18, 23 | திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை, ஆரஞ்சு, பொன் நிறம் | எண்கள்: 1, 3, 5, 6.

பரிகாரம்: துர்க்கையையும் விநாயகரையும் முருகனையும் வழிபடவும்.

SCROLL FOR NEXT