ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆர்ஜித சேவை டிக்கெட்கள் இன்று மாலை வெளியீடு

என்.மகேஷ்குமார்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை ரூ.300 சிறப்பு தரிசனம், சர்வ தரிசனம், விஐபி பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடை தரிசனம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

இதில், கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை போன்றவற்றில் பங்கேற்று சுவாமியை தரிசிக்கவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதன்படி மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்கள் இன்று (22-ம் தேதி) மாலை 4 மணிக்கு தேவஸ்தானத்தின் இணையத்தில் வெளியிடப்பட உள்ளன. குறிப்பிட்ட நேரத்தில், நாளில் பக்தர்கள் இதன் மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இதேபோல, மீதமுள்ள மேலும் சில ஆர்ஜித சேவை டிக்கெட்களை, அதிர்ஷ்ட சுழற்சி மூலம் பக்தர்கள் இன்று காலை 10 மணி முதல் 24-ம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். இதில் டிக்கெட் கிடைத்த பக்தர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்தி, தங்களது அதிர்ஷ்ட சுழற்சி டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளம் மூலமாகவோ அல்லது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் TTDEVESTHANAM என்ற மொபைல் செயலி மூலமாகவோ பக்தர்கள் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT