ஆன்மிகம்

ஏழுமலையானை தரிசிக்க மார்ச் 1 முதல் புதிய வசதி - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

என்.மகேஷ்குமார்

திருமலை: திருப்பதியில் ஆதார் அட்டையை காண்பித்து ஏழுமலையானை சர்வ தரிசனம் மூலம் பக்தர்கள் தரிசிக்கலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள் திருமலை வைகுண்டம் காம்ப்ளக்ஸில் காத்திருந்து சுவாமியை தரிசிக்கின்றனர்.

மார்ச் 1-ம் தேதி முதல், சர்வ தரிசன வழியில் செல்லும் பக்தர்களுக்கு வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் 2-ல், அவர்களின் முகம் ஸ்கேன் செய்யப்படும். தங்கும் அறைக்கும் பக்தரின் முகத்தை ஸ்கேன் செய்து அறையை ஒதுக்க உள்ளனர். இப்படி செய்வதன் மூலம் அதிகமாக இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களை கட்டுப்படுத்த முடியும். தங்கும் அறைக்கான டெபாசிட்டை திரும்ப வழங்குவதிலும் எவ்வித தவறுகளும் நேர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்த புதிய முறை வெற்றிகரமாக அமைந்தால், இனி வரும் நாட்களில் பக்தர்கள் யாரும் எவ்வித டோக்கன்களும் பெறாமலேயே நேராக திருமலையில் சுவாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தான அதிகாரிகள் கூறுகின்றனர்.

சிவனுக்கு பட்டு வஸ்திரம்: வாயுத்தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்றிரவு மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, சிவ-பார்வதி திருக் கல்யாணம் வைபோகமாக நடை பெற்றது. இதனையொட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அதன்நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டிதம்பதியினர் பட்டு வஸ்திரங்களையும், சீர் வரிசைகளையும் கொண்டுவந்து காணிக்கையாக வழங்கினர்.

SCROLL FOR NEXT