திருப்பதி: திருப்பதியை அடுத்துள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை அனுமன் வாகனத்தில் ஸ்ரீநிவாசர் எழுந்தருளினார்.
திருப்பதி அருகே ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் வெங்கடேச பெருமாள் கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்கோயிலில் தற்போது வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
இதில் 6-ம் நாளான நேற்று, அனுமன் வாகனத்தில் கோதண்டராமர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீநிவாசர் காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.