கோவை: கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ருத்ராட்சம் என்ற வார்த்தையின் பொருளே ‘சிவனின் பரவச கண்ணீர் துளி’ என்பதாகும். புராண கதைகளின் படி, ‘ஆதியோகியான சிவன் நீண்ட காலம் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து இருந்தார்.
அவர் பரவசநிலையில் முற்றிலும் அசைவின்றி நிச்சலனமாக அமர்ந்திருந்தார். அவர் கண்களிலிருந்து வழிந்தோடிய பரவசக் கண்ணீர் துளிகள் மட்டுமே அவர் உயிரோடு இருந்ததற்கு ஒரே அறிகுறியாக இருந்தது. அவருடைய கண்ணீர் துளிகள் பூமியில் விழுந்து ருத்ராட்சமாக மாறியது’ என கூறப்படுகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ருத்ராட்சத்தை அனைவரும் அணிந்து சிவனின் அருளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சத்குரு, ‘ருத்ராட்ச தீட்சை’ என்ற வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார். இதற்காக, மகா சிவராத்திரி இரவில் லட்சக்கணக்கான ருத்ராட் சங்களை சத்குரு பிரதிஷ்டை செய்ய உள்ளார்.
சக்தியூட்டப்பட்ட இந்த ருத்ராட்சத்தை இலவசமாக பெற விரும்பும் பக்தர்கள் https://isha.co/rd-ta என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு, ருத்ராட்சத்துடன் சேர்த்து, தியானலிங்க விபூதி, அபய சூத்ரா, ஆதியோகி புகைப்படம் ஆகியவை அவர்களின் இல்லத்துக்கே அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.