பழநி: பழநி கோயில் கும்பாபிஷேகத்தை நேரடியாக காண மலைக்கோயில் மற்றும் மலையடிவாரப் பகுதியில் எல்இடி திரைகள் அமைக்கப் படுகின்றன.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் நடைபெற உள்ளது. மலைக்கோயிலுக்கு சென்று கும்பாபிஷேகத்தை காண 6,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 2000 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டு, அவர்களுக்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
மலைக் கோயிலுக்கு வர முடியாத பக்தர்கள் கீழே இருந்து கும்பாபிஷேகத்தை காண வசதியாக பழநி மலையடிவாரம், கிரி வீதிகள் மற்றும் பேருந்து நிலையம் உட்பட 18 இடங்களில் எல்இடி திரைகள் அமைக் கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மலைக்கோயிலில் கோபுர விமான தளத்துக்குச் சென்று கும்பாபிஷேகத்தை பார்க்க முடியா தவர்கள் பிரகாரத்தில் இருந்தபடி பார்க்கவும் பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கோயில் இணையதளம், தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல் மூலம் கும்பாபிஷேகத்தை நேரலையாக ஒளிபரப்பு செய்யவும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.