ஆன்மிகம்

ஜோதிடம் என்பது அறிவியலா?- 4: ஜோதிடத்தில் சூரியனின் பங்கு

மணிகண்டன் பாரதிதாசன்

பூமி சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. அவ்வாறு இருக்க, சூரியனுக்கு அருகில் சில சமயமும், தொலைவில் சில சமயமும் பூமியானது சஞ்சாரம் செய்யும்.

மேலும் சூரிய ஒளியை பூமியானது நேர்கோட்டில் பெறுவதால், பூமிக்கு நேர்கோட்டில் சூரியன் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அதாவது, ஜாதக கட்டத்தில் சூரியன் இருக்கும் ராசியில் இருந்து ஏழு கட்டங்கள் தள்ளி, பூமியானது இருக்கிறது எனலாம். அதனால் ஒரு நாளுக்கு ஒரு பாகை வீதம் பூமி நகர்கிறது என்பதால், ஜோதிடத்தில் சூரியனை ஒரு பாகை நகர்த்தி பூமி சுழற்சிக்கு ஏற்றவாறு சூரிய ஒளி பூமியில் விழுந்து தட்பவெப்ப மாற்றங்கள் தருகிறது என்கிறது ஜோதிடம். இதில் இருந்து ஜோதிடம் ஒரு விஞ்ஞான அறிவியல் கலந்த கலை என்பதை அறியலாம்.

சூரியனின் நகர்வை வைத்தே அறிவியல் முறைப்படியே தமிழ் மாதங்கள் வகுக்கப்பட்டது.

சூரியனும் சந்திரனும்

ஜோதிடத்தில் சூரியன் தந்தை என்றும் அல்லது அரசன் என்றும் அழைக்கப்படுகிறார். சூரியனே அனைத்து கிரகங்களுக்கும் சூரியனில் இருந்தே அனைத்து கிரகங்களும் உருவானது என்பதை குறிக்கவே சூரியன் தந்தை என்று அழைக்கப்படுகிறார். மேலும் தனது ஈர்[ப்பு விசையால் அனைத்து கிரகங்களையும் கட்டுப்படுத்தி வைத்திருப்பதால் சூரியன் அரசன் என்று ஜோதிடம் கூறுகிறது. இதன் காரணமாகவே சூரியனை மிக முக்கிய கடவுளாக வழிபடும் பழக்கம் கொண்டு இருந்தனர்.

ஜோதிடத்தில் நட்சத்திரங்களின் பங்கு மிக முக்கியமானது. பூமி சுற்றிவரும் பாதையில் பூமியைச் சுற்றி இருக்கும் நட்சத்திர கூட்டங்களை சந்திரனின் இயக்கத்தை கொண்டு அறிந்தனர் நமது முன்னோர்கள். அந்த நட்சத்திர கூட்டங்களுக்கு அதன் வடிவத்தை கொண்டு பெயரிட்டனர். இந்த நட்சத்திர கூட்டங்களை இரவில் மட்டுமே காண முடியும் என்பதால் சந்திரனின் செயல்பாடுகளை கொண்டே நட்சத்திர பண்புகளை ஆராய்ந்தனர்.

மொத்தம் 27 நட்சத்திர கூட்டங்களை வரையறுத்தனர். இதைக் கொண்டே பஞ்சாங்க காரணிகளை வகுத்தனர். இதன் காரணமாகவே பல இந்து பண்டிகைகள் திதிகளில் பெயர்கள் கொண்டும் மற்றும் நட்சத்திரங்களின் பெயர்களை கொண்டும் அமைவதை அறியலாம்.

கால புருஷ சக்கரம்

பூமி 360 சுழற்சி பாகையில் தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனைச் சுற்றி வருவதால், ஜோதிடம் பற்றிய அனைத்து முக்கிய விதிகளும் பூமியின் சுழற்சியால் உருவாகும் 'கால புருஷ சக்கரம்' என்ற தத்துவம் கொண்டு வரையறுக்கப்பட்டது. இந்த கால புருஷ சக்கரம் என்பது பூமி சுற்றி வரும் வட்டப்பாதையில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களைக் கொண்டு வரையறுக்கப்பட்டது. நட்சத்திர கூட்டங்களை 12 ராசி மண்டலங்களாக பிரித்து அதில் சஞ்சரிக்கும் கிரகங்களை கொண்டு ஜோதிட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

(மேலும் அறிவோம்)

SCROLL FOR NEXT