ஆன்மிகம்

ஓஷோ சொன்ன கதைகள்: மில்லியன் டாலர் கனவு

ஷங்கர்

மூன்று பேர் பேசிக்கொண்டிருந்தனர். “ஒரு கோடி ரூபாய் கிடைப்பது போல ஒரு கனவு உனக்கு வந்தால், அந்தப் பணத்தை வைத்து என்ன செய்வாய்?” என்று அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார்.

“நான் உலகப் பயணம் செல்வேன். எனது குழந்தைப் பருவத்திலிருந்து தொடரும் கனவு அது. நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார்.

“நான் அந்தப் பணம் கிடைத்தால் எங்கேயும் போகமாட்டேன். வீட்டிலேயே இருந்து மிகவும் உல்லாசமாக இருப்பேன்.” என்றார்.

அவர்கள் இருவரும் மூன்றாமாவரிடம் அதே கேள்வியைக் கேட்டனர்.

“நான் எனது கண்களைத் திறந்து மீண்டும் மூடி தூங்கத்தொடங்கி விடுவேன். திரும்பத் திரும்ப கனவு வந்தால் நிறைய கோடி ரூபாய்கள் கிடைக்கும்.” என்றான்.

உங்கள் மனம் என்பது அப்படிப்பட்ட கனவுதான், அது ஒரு கற்பனைதான். நீ அதில்தான் இருக்கிறாய். மனதிலிருந்து எப்படி வெளியேறலாம் என்று நினைக்கும்போதும் அதுவும்கூட மனதின் கற்பனைதான்.

SCROLL FOR NEXT