ஆன்மிகம்

ஆன்மிக நூலகம்: குளத்தில் மீன்கள் ஏதும் இல்லை

செய்திப்பிரிவு

வீணாகத்தான் எண்ணிறந்த பிறவிகளூடே

கஹகாரகரைத் தேடியிருந்தேன்

அவரைக் கண்டேனில்லை.

பிறப்பிறப்பென்று அலைவதுதான்

எவ்வளவு சிரமம்

இப்போது உம்மைக் கண்டுகொண்டேன்.

ஓ, கஹகாரகா!

இனி எப்போதும் நீங்கள் என் வீட்டைக் கட்டப்

போவதில்லை.

கைமரத்தை வெட்டிவிட்டேன்.

உத்திரத்தை உடைத்துப் போட்டுவிட்டேன்.

ஆசைகளை அறுத்துப் போட்டுவிட்டேன்.

இப்போது என் மனம் விடுதலையாகிவிட்டது.

குளத்தில் மீன்கள் ஏதும் இல்லை.

நீளக்கால் கொக்குகள் மட்டும் நீரில்

நிற்கின்றன.

இளமையில் செல்வத்தை மனம் போன

போக்கில் செலவழித்தவனுக்கு

மிஞ்சுவது துயரமே.

உடைந்த வில்லுக்குச் சோகம்தான்.

தோன்றி மறைந்ததையெல்லாம் நினைத்துப் பார்த்து

சோகப் பெருமூச்சுத்தான் விடுகிறான்.

SCROLL FOR NEXT