மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ல் கேதுவுடன் உலவுவது சிறப்பு. எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். இயந்திரப் பணியாளர்கள், இன்ஜினீயர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். ஆதாயம் பெருகும். சுப காரியங்களுக்காகச் செலவுகள் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். செந்நிறப்பொருட்கள், நிலபுலங்கள், கட்டடப் பொருட்கள், எரிபொருட்கள், மின் சாதனங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை.
எனவே பிள்ளைகள் நலனில் கவனம் தேவை. அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. உழைப்புக்குப் பின்வாங்காமல் கடுமையாகப் பாடுபடுவதன் மூலம் வளர்ச்சி காணலாம். வாரப் பின்பகுதியில் பொருளாதார நிலையில் ஓரளவு வளர்ச்சி காண்பீர்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். நண்பர்களும், உறவினர்களும் உதவிக்கரம் நீட்டுவார்கள். நிலபுலங்களால் வருவாய் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதி: டிசம்பர் 13. | திசைகள்: வடமேற்கு, தெற்கு.
நிறங்கள்: மெரூன், சிவப்பு. | எண்கள்: 7, 9.
பரிகாரம்: சூரியன், குரு, சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்துவருவது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 8-ல் புதனும் 9-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவது சிறப்பு. முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். நல்ல தகவல் வந்து சேரும். பெரியவர்கள், தனவந்தர்களின் ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகளுக்கு செழிப்புக் கூடும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள்.
தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். சுபச் செலவுகள் கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். கணவன்-மனைவி இடையே சலசலப்புகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கியிருக்கும். உடன்பிறந்தவர்கள், பிள்ளைகளால் நலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 9, 13.
திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், பொன் நிறம் | எண்கள்: 3, 6, 7, 9.
பரிகாரம்: துர்க்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் சூரியன்; சனியும், 8-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. எடுத்த காரியத்தில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் லாபம் தரும். பயணத்தால் ஒரு எண்ணம் நிறைவேறும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும்.
முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் உங்களைப் போற்றுவார்கள். புதிய பட்டம், பதவிகள் சிலருக்கு கிடைக்கும். உழைப்பு வீண்போகாது. பொதுநலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.பெண்களின் நோக்கம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். தந்தை நலனில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 9, 13
திசைகள்: தென்மேற்கு, மேற்கு, கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், நீலம், ஆரஞ்சு | எண்கள்: 1, 4, 6, 8.
பரிகாரம்: திருமாலையும் விநாயகரையும் வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
கோசாரப்படி கிரகநிலை சாதகமாக இல்லை. குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். பொருளாதார நிலையில் சரிவு ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். குறுக்கு வழிகளில் செல்லலாகாது. உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் பொறுப்புணர்ந்து கடமையாற்றுவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். புதிய துறைகளில் முதலீடு செய்ய இந்தநேரம் சிறப்பானதாகாது. பிள்ளைகள் நலனில் கவனம் தேவை. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது.
கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும். உடன்பிறந்தவர்களால் பிரச்சினைகள் சூழும். எக்காரியத்திலும் அவசரம் கூடாது. ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. வீண்வம்பு, சண்டைகளைத் தவிர்க்கவும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு அவசியமாகும். விளையாட்டு, விநோதங்களைத் தவிர்க்கவும். ஜனன கால ஜாதகப்படி யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 9, 13 | திசை: வடமேற்கு.
நிறம்: வெண்மை | எண்: 2.
பரிகாரம்: குல தெய்வத்தையும் நவக்கிரகங்களையும் வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குரு உலவுவது நல்லது. குடும்ப நலம் சீராக இருந்துவரும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். இதர கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் சுகம் குறையும். நண்பர்கள், உறவினர்களால் சங்கடங்கள் சூழும்.
கலைஞர்களுக்கு எதிர்ப்புக்கள் அதிகரிக்கும். மாதர்களால் பிரச்னைகள் ஏற்படும். செய்து வரும் தொழிலில் அதிக கவனம் தேவை. பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. சகிப்புத் தன்மை தேவை. வீண் ஆடம்பரங்களைத் தவிர்க்கவும். கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பதும் நல்லது. அலைச்சலால் உடல் அசைதி ஏற்படும். வாரப் பின்பகுதியில் முக்கியமானதொரு எண்ணம் நிறைவேறும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதி: டிசம்பர் 13 | திசை: வடகிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், தாமரை நிறம் | எண்: 3.
பரிகாரம்: துர்கையையும் விநாயகரையும் வழிபடவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும், சனியும், 4-ல் புதனும் 5-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவது நல்லது. வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு ஆதாயம் அதிகமாகும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். பொதுப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மக்களால் அனுகூலம் உண்டாகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும்.
புதிய ஆடை, அணிமணிகள் சேரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும்; போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். குடும்ப நலம் சிறக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வ தரிசனம் கிடைக்கும். முக்கியமானவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 9, 13 | திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், மெரூன் | எண்கள்: 1, 6, 7, 8, 9.
பரிகாரம்: துர்கை அல்லது காளியை வழிபடவும்.