திருப்புவனம் வடகரையில் குலசேகரபட்டினம் தசரா விழாவுக்கு வேடமணிந்து சென்ற காட்டுநாயக்கர்கள். 
ஆன்மிகம்

குலசேகரப்பட்டினம் தசரா விழாவுக்கு பல்வேறு வேடமணிந்து சென்ற திருப்புவனம் காட்டுநாயக்கர்கள்

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த காட்டுநாயக்கர்கள் குலசேகரப்பட்டினம் தசரா விழாவுக்கு பல்வேறு வேடமணிந்து சென்றனர்.

தூத்துக்குடி அருகே குலசேகரபட்டினம் முத்தாலம்மன் கோயில் தசரா விழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்த பல்வேறு வேடங்கள் அணிந்து செல்வர்.

அதேபோல் திருப்புவனம் வடகரையைச் சேர்ந்த காட்டுநாயக்கர் இனத்தைச் சேர்ந்தோர் செல்வது வழக்கம். மேலும் அக்.5-ம் தேதி தசரா விழா நடப்பதையொட்டி, திருப்புவனம் வடகரையைச் சேர்ந்தோர், இவ்விழாவில் பங்கேற்க 20 முதல் 48 நாட்கள் வரை விரதம் இருந்தனர்.

அவர்கள் நேற்று குறத்தி, யாசகர் உள்ளிட்ட வேடமணிந்து குலசேகரபட்டினத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

SCROLL FOR NEXT