சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழாவின் போது ஆண்டுதோறும் பிரமாண்டமான கொலு வைக்கப்படுவது வழக்கம்.
நடப்பாண்டின் நவராத்திரி விழாவையொட்டி இக்கோயிலில் வழக்கம் போல் பெரிய அளவிலான கொலு அமைக்கப்பட்டுள்ளது. 21 அடி அகலம், 21 அடி நீளம், 21அடி உயரத்தில் 21 படிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்தக் கொலுவில் சுமார் 3, 500 க்கும் மேற்பட்ட பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.
இக்கொலு வைபவம் நேற்று தொடங்கியது. நவராத்திரியையொட்டி, இந்த கொலு தொடங்கப்பட்டிருப்பதால் நேற்று முதல் வரும் 5-ம் தேதி வரை நாள்தோறும் இரவு நடராஜர் கோயிலில், சிவகாமசுந்தரி அம்மனுக்கு விசேஷ அபிஷேக, அலங்கார,
ஆராதனைகள் செய்து ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அந்நிகழ்வோடு பக்தர்கள் பெரிய அளவிலான இந்தக் கொலுவை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டை கோயில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.
இந்த பிரமாண்ட கொலு விற்காக பக்தர்களும் புதிய பொம்மைகளை வழங்கியுள்ளனர்.