சென்னசமுத்திரம் சிவன்கோயில் வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், சென்ன சமுத்திரத்தில் வயல் நடுவே ஒரு சிவலிங்கம் ஊர்மக்களால் கண்டெடுக்கப்பட்டது. வாராது வந்த மாமணியே என கொண்டாடிய கிராம மக்கள் ஒன்றிணைந்து ஊர் மத்தியில் அரனுக்கு அழகிய ஆலயம் எழுப்பினார்கள். வயல் நடுவே கிடைத்த அரன் என்பதால் அன்னபூரணி சமேத காசி விஸ்வநாதராய் அமர்த்தி அதனைக் கொண்டாட முடிவுசெய்துள்ளார்கள். வரும் 7.7.2014 அன்று கோயில் கும்பாபிஷேகம் காண இருக்கிறது. ஆலய தொடர்புக்கு: 9840053289
சாத்தனூர் ஐராவதீஸ்வரர் கோயில்
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், சாத்தனூரில் இருக்கிறது சௌந்தரநாயகி சமேத ஐராவதீஸ்வரர். துர்வாசரால் இந்திரனுக்கும் ஐராவதம் யானைக்கும் ஏற்பட்ட சாபத்தை நீக்கி அருளியவர் என்பதால் இத்தல சிவனுக்கு இந்தத் திருநாமம். அறுபத்து மூவரில் ஒருவராகவும், பதினென் சித்தர்களில் ஒருவராகவும் விளங்கும் திருமூலர் அவதரித்த தலமிது. இத்தல அரனின் ஆலயம் திருப்பணி செய்யப்பட்டு 9.7.2014 அன்று கும்பாபிஷேகம் காண இருக்கிறது. ஆலய தொடர்புக்கு: 9047849904.
தாழம்பூர் த்ரிசக்தியம்மன் கோயில்
சென்னை நாவலூர் அருகே, தாழம்பூர், கிருஷ்ணா நகரில் இருக்கிறது, த்ரிசக்தி அம்மன் கோயில். இத்தலத்தில் சரஸ்வதி, மூகாம்பிகை, மகாலட்சுமி ஆகிய மூன்று தேவியரும் த்ரிசக்தி அம்மனாக அருள்கிறார்கள். இந்த ஆலயத்தின் வருஷாபிஷேக விழா திருவேற்காடு ஆதி கருமாரி பட்டர் ஐயப்ப சுவாமிகள் தலைமையில் 3.7.2014 அன்று மாலை யாகத்துடன் தொடங்குகிறது. 4.7.2014 அன்று காலை ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சந்நிதியில் ஸ்வர்ணாகர்ஷண பால சாஸ்தா விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்புக்கு: 9381019197, 9962336699.