ரோஹிணி
கடமை உணர்வுடன் திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவரான ரோஹிணி நக்ஷத்ர அன்பர்களே, இந்த மாதம் விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். எதிர்பாலினரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும்.
குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும்.
பெண்களுக்கு குடும்பத்தில் உங்களது ஆலோசனையை கேட்டு நடப்பார்கள். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும்.
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நன்மை தரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் தீரும். வீண் அலைச்சல் குறையும். காரிய தடைகள் நீங்கும்.
+: பழைய பாக்கிகள் வசூலாகும்
-: அலைச்சல் இருக்கும்
மிருகசீரிஷம்
அடுத்தவர் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை எடுத்து கூறும் திறமை பெற்ற மிருகசீரிஷம் நக்ஷத்ர அன்பர்களே, இந்த மாதம் எல்லாவகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். உல்லாச பயணங்களும் செல்ல நேரலாம்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.
குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அநுசரித்து செய்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பெண்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
பரிகாரம்: ஆஞ்சனேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி வணங்க கஷ்டங்கள் தீரும். மனோ தைரியம் கூடும்.
+: முக்கிய நபர்களின் ஆதரவு இருக்கும்
-: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
திருவாதிரை
போராட்டத்தைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து நின்று வெற்றி பெறும் திருவாதிரை நக்ஷத்ர அன்பர்களே, இந்த மாதம் காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாக்கும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும்.
தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும். உறவினர்களிடமும் பழகுவதில் கவனம் தேவை.
பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். முழுகவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும்.
மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவுடன் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். விளையாட்டில் ஆர்வம் ஏற்படும்.
பரிகாரம்: குலதெய்வத்தை பூஜை செய்து வணங்க சிக்கல்கள் தீரும். மன அமைதி, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
+: மனக்குழப்பம் நீங்கும்
-: உறவினர்கள் நண்பர்களிடம் பேசும் போது கவனம் தேவை