பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக சதுரகிரி மலைக் குச் செல்ல நாளை (8-ம் தேதி) முதல் செப்.11-ம் தேதி வரை 4 நாள்களுக்கு பக்தர்களுக்கு அனு மதி அளிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயில் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், பவுர் ணமி, அமாவாசை தினத்தை ஓட்டி 4 நாட்கள் மட்டும் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
இந்நிலையில், செப். 8-ம் தேதி பிரதோஷம், 10-ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
காய்ச்சல், இருமல் உள்ளவர்களும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டமுதியவர்களும் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதியில்லை. மேலும், காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.
சதுரகிரி மலையில் இரவு தங்கவோ, நீரோடைகளில் குளிக்கவோ அனுமதி கிடையாது. எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
திடீர் மழை பெய்தால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.