மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி. (அடுத்த படம்) ஊஞ்சல் உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அங்காளம்மன். 
ஆன்மிகம்

அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

செய்திப்பிரிவு

விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு ஆவணி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.

அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோயில் பூசாரிகள் அங்காளம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர்.

இரவு 12.30. மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது இதையடுத்து உற்சவர் அங்காளம்மனை கோயில் மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.

SCROLL FOR NEXT